July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருச்சியில் நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு 2019

கரம் நீட்டி அழைக்கிறோம் கரம் கோர்க்க வாருங்கள்…
இந்த பூமித்தாய் சந்திக்கிற அத்தனை சிதைவுகளுக்கும், மனிதனின் தூக்கியெறியும் கலாச்சாரமே காரணம்
என்கிறார் அய்யா நம்மாழ்வார்பல வழிகளில் நம்மையும், நாம் சார்ந்துள்ள அனைத்தையும் செல்லரிப்பது போல் அரித்துக் கொண்டிருக்கிற நெகிழி பயன்பாட்டுக்கு எதிராக கரம்கோர்க்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்
பத்துவருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் முன்புவரைக்கும் வீட்டில் இருக்கும் ஒரு சேலையோ துணியோ அடுத்தடுத்து தலைமுறைகளைத் தாண்டியும் கைமாறிவரும். தொட்டில் சீலையாக, சிசுத்துணியாக அந்த பந்தம் பழமையோடு தொடர்ந்துவரும் வாழ்நாள் நெடுக.
தூக்கியெறிதல் என்ற நிலையே வெறும் சொற்ப அளவில் இருந்த கடந்தகால வாழ்முறையில் மறுசுழற்சிக்கான முகாந்திரங்களோடே பொருளுற்பத்தி இருந்திருக்கிறது. மேலும் அக்காலத்திய பண்பாட்டுப்போக்கும் மண், மனிதர்கள் மற்றும் சூழலுக்கு ஒத்திசைந்து வாழும் சமூகமாக இந்தியநிலம் முழுமையையும் பிணைத்து வைத்திருந்தது. பூமியைப் புரிந்துகொள்ளுதலே நாகரீகம் என்று சுற்றுச்சூழலுக்கு சுமூகமாகவே நமது விழுமியங்கள் கட்டமைக்கப்பட்டது.
மரபில் வேரூன்றிய அந்தக்கண்ணி அறுபட்டு இன்றைக்கு நாமுண்டாக்கிய நெகிழி குப்பைகளின் ஒவ்வாமையை தாக்குப்பிடிக்க முடியாத அபாயத்தினுள் வந்துசேர்ந்திருக்கிறோம்.
இந்தக்குற்றவுணர்விலிருந்து மீள்வதற்கான ஒரு முயற்சியே இந்த நெகிழி இல்லா தமிழகம் மாநாடு…
இது சுயசுத்திகரிப்பைநம் சமூகம் துவங்குவதற்க்கான தயார்செய்கை
இம்மாநாட்டில் நெகிழி இல்லா தமிழகம் உருவாக்குவது குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் குறித்து சூழிலியல் ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள் பிளாஸ்டிக் பயனபாட்டை தவிர்க்க வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள்,ஆவனப்படம்,பிளாஸ்டிக் இந்த பூமியில் நிகழ்த்திய தீமைகளை விளக்கும் வகையிலான புத்தக வெளியீடுகள்,துணிப் பை வழங்குதல்,பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி,பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருட்கள் கண்காட்சி மாநாட்டுத் தீர்மானங்கள் என ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள சூழலியல் அறிஞர்கள் சூழலியல் மற்றும் சமூக ஆர்வலர்களும் பள்ளி கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்க்க இருக்கின்றனர்
உங்கள் ஒவ்வொருடைய உடனிருப்பும் ஒத்துழைப்பும் ஆலோசனைகளுமே இம்மாநாட்டை மாநாட்டின் நோக்கத்தை வெற்றியடையச்செய்யும் வாருங்கள் நெகிழி இல்லா தமிழகம் உருவாக அய்யா நம்மாழ்வார் சொன்னதைப் போல்…
வாருங்கள்…நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வு
மாநாடு….2019 நாள் ஜூலை 14 நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் ;தேசிய கல்லூரி கருமண்டபம் திருச்சி

“செயல்வழி சத்தமெழுப்புவோம்”தொடர்புக்கு…
greenpages14@gmail.com /9500802803

About Author

error: Content is protected !!