May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

செய்தியாளர் நெல்லை டேவிட்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த இவர்  மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.பின்னர் அதிமுகவில் அவருக்கு போதிய அளவில் மரியாதை கிடைக்க வில்லை என்று கூறப்பட்டது ,

இதனிடையே ஜெயலலிதாவை சந்தித்த சில நாட்களில் படுத்த படுக்கையானார் பின்னர் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டாலின் முன்னிலயில் திமுகவில் இணைந்தார் , அங்கு அவருக்கு திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது
இந்நிலையில் இன்று அய்யாதுரை பாண்டியன் பள்ளி மற்றும் சொகுசு விடுதி , மற்றும் பங்களாக்கள் மேலும் வர்த்தக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, நெல்லை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த இவர் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் சமீப காலத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் அய்யாதுரை பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருப்பது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

About Author

error: Content is protected !!