May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார்.
பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இந்து, முஸ்லீஸ், கிறிஸ்தவர்களும் என மத வேறுபாடின்றி வாழ்ந்து வருகிறார்கள். வரும் மக்களவை தேர்தலில் மோடியின் கூட்டணிக்கு வாக்களித்தால் நம்மிடையே பிரிவினையை உருவாக்கி விடுவார்கள்.
மோடியின் ஆட்சி முடிந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம். 2014 ல் மோடிக்கு வாக்களிக்காத கோபத்தில் தான் தமிழ்நாட்டை அவர் புறக்கணிக்கிறார். தமிழ்நாட்டில் விவசாயத்தை ஒழித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதை தடுத்து கர்நாடகாவில் தடுப்பணையும், கேரளாவில் தடுப்பணையும் கட்டி தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் செய்வதே மோடியின் திட்டம்.
ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிட்ட என்னை வெற்றி பெற செய்தார்கள். திமுக கூட்டணி டெபாசிட் போன கூட்டணி. திருவாரூரிலேயே தேர்தலை சந்திக்க பயந்தவர்கள் அவர்கள். காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டில் நலன்களை எல்லாம் புறக்கணித்து கர்நாடகாவிற்கு கேரளாவிற்கு அவர்கள் சாதகமாக இருந்தார்கள். மோடியின் மற்ற மாநில மக்கள் ஏமாந்ததுபோல தமிழ்நாட்டு மக்கள் ஏமாற வில்லை. தென்காசியில் இயற்கை அழிக்கும் அளவிற்கான புதிய கட்டுமானங்களை ஏற்படுவதறகு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும், தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க வகையிலான புதிய திட்டங்களை செயல்படுத்தப்படும், பீடித் தொழிலாளர்கள் உரிய மருத்துவ வசதி பெறுவதற்கு இஎஸ்ஐ மருத்துவமனை கொண்டு வரப்படும், காய்கறி மற்றும் வேளாண்மைத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும், இளைஞர்களுக்கு உண்மையான வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும், நீட் தேர்விற்கு தடைசெய்திடவும், எங்களுக்கு வாக்களியுங்கள்
பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை, மண்டல செயலாளர் மாணிக்கராஜா, அமமுக மாவட்ட செயலர் பாப்புலர் முத்தையா, , ஒன்றிய செயலாளர் சரவணன், மேலப்பாவூர் முத்தையா, உள்ளிட்ட அமமுக கட்சியை சேர்ந்ததிரளானோர் கலந்து கொண்டனர்

About Author

You may have missed

error: Content is protected !!