June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திமுக ஆர்.எஸ் பாரதியின் வரம்புமீறிய பேச்சு அமைச்சர் ஜெய குமார் கண்டனம்

பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் பற்றி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் வரம்புமீறிய அநாகரீக பேச்சுக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறேன்.

நாட்டின் நான்காவது தூண் பத்திரிகை துறை. இரவு பகல் பாராமல், மழை வெயில் பொருட்படுத்தாமல், உணவு உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எந்தநேரத்திலும் எறும்பு போல சுறுசுறுப்பாய் செயல்பட்டு செய்தியை மக்கள் மத்தியில் உடனுக்குடன் கொண்டு போய் சேர்ப்பவர்கள் ஊடகவியலாளர்கள்

இதை எதையும் பொருட்படுத்தாமல், தான் தோன்றித்தனமாக வாய்க்கு வந்தவாறு ஆர் எஸ் பாரதி பேசியிருப்பதை பார்க்கும்போது, அவரது நாவில் சனி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இவரின் பேச்சு கேட்டு கோபத்துடன் மன வருத்தமும் அடைந்தேன். தற்போது இதற்கு ஆர் எஸ் பாரதி மன்னிப்பு கோரி இருந்தாலும் அவருடைய பேச்சு அநாகரிகமானது தான்

நல்லது கெட்டது ஆராய்ந்து நடுநிலையாக செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் ஊடகவியலாளர்களை என்றும் மதித்து நடந்துக்கொள்ளுதல் வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு மன சங்கடத்தை கொடுத்து விடக்கூடாது என்பதை மறந்து விட கூடாது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் இதுபோன்ற பண்பில்லாத பேச்சுக்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்

பண்பில்லாதவர்களிடம் என்றுமே பண்பை எதிர்பார்க்க முடியாது. “சுட்டாலும் சங்கு வெண்மையை தரும்”. அதுபோல என்றைக்கும் பத்திரிக்கையாளர்கள் மேன்மக்களே…!

என தனது அறிக்கையில் அமைச்சர் டி. ஜெயக் குமார் தெரிவித்துள்ளார் மேலும் பல பத்திரிகை அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன

About Author

error: Content is protected !!