May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எனக்கு பிடித்த பெண்

மகளிர் தினமான இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்  இருந்து கிளம்பிய லோக்கல் ரயிலில் ஒரு வயதான பெண்மணி என் நண்பரிடம் பிச்சை கேட்டு வந்தார் ,  நண்பர் அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை சற்று நேரத்தில் அடுத்த நிறுத்ததில் இறங்க வேண்டும் என படி அருகில் வந்தார் , இறங்குவதற்கு  நின்ற அவரிடம் உங்களுக்கு  எந்த ஊர் என்றேன் கள்ளக்குறிச்சி என்றார்
குடும்பம் இருக்கிறதா ? என்று கேட்டேன் ஆமாம் மகள் இருக்கிறாள் என்றார் அப்புறம் எதுக்கு இப்படி என்றேன் எத்தனை நாளைக்கு அவளிடம்  வாங்கி சாப்பிட முடியும் , அதான் இப்படி என்றார் உங்களுக்கு சங்டமாக இல்லையா என்றேன் அவகிட்ட வாங்கி தின்பதை விட இது ஒன்றும் கேவலம் இல்லை என்றார் என்னால வேலை செய்ய முடியல வெறும் பசிக்கு மட்டும் தான் இப்படி செய்கிறேன் என்றார் சாப்பாடு போக காசு மீதம் ஆகுமா , அந்த காசை என்ன செய்வீங்க என்றேன் அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு கண்ணீர் வந்து விட்டது ஆமாம்
மிச்ச சொச்ச பணத்தை மாசத்தில் இரண்டு தடவை மகளிடம் கொடுத்து விடுவேன் என்றார் , தாயை பிச்சை எடுக்க வைத்து விட்டு வீட்டில் இருந்து கொண்டு தாய் பிச்சை எடுக்க வைத்த அந்த மகளை என்ன சொல்வென்று  தெரியவில்ல அந்த தாயின் பெயர் கேட்டேன் சிரித்து கொண்டே சொல்ல மறுத்து விட்டார் எனோ அவரை படம் பிடிக்க மனம் வரவில்லை
(இந்தப்படம் google )

About Author

error: Content is protected !!