February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தாமிரபரணி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்னாச்சுஉயர்நீதிமன்றம் ?

நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசம் துவங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக் காயல் வரை 128 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவர்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் சுமார் 300 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த 128 கிமீ. தூரம் வரை இன்னும் பல மண்டபங்கள், அபார்ட்மென்ட்கள் உட்பட பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.
இந்த இடத்தில் ஆக்கிரமித்துள்ளவர்கள் கழிவுநீரை நேரடியாக தாமிரபரணி ஆற்றுக்குள் விடுவதால் ஆற்று நீரும் மாசுபட்டு வருகிறது.
எனவே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும்”
என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

படம் நன்றி கூகிள்

About Author

error: Content is protected !!