June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழிசையின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசு-பிரேமலதா விஜயகாந்த்

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை நல சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது  விழாவில் கட்சிப் பாகுபாடின்றி பலரும் கலந்து கொண்டனர்

விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது


கவர்னராக வீற்றிருக்கும் தமிழிசை எனக்கு உடன் பிறவா சகோதரி நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருவரும் வீட்டில் சந்தித்து பேசக் கூடியவர்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா வளராத காலத்திலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனி ஆளாக கட்சிக் கொடியை பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பி செல்வார்.அதைப் பார்த்து நான் என் கணவர் கேப்டனிடம் அடிக்கடி சொல்வேன்’ இவர் நிச்சயம் என்றாவது ஒருநாள் பெரிய ஆளாக வருவார் என்று” அதேபோல் இன்று உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார்.
அவரது கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கடவுள் கொடுத்த பரிசு தான் இந்தப் பதவி. சுருக்கமாகச் சொன்னால் கடமையை செய்யவேண்டும் பலனை எதிர்பார்க்க கூடாது.
இன்று தமிழிசை அந்த மாதிரிசெயல்பட்டுத் தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறார். அவர் இன்னும் உயர்ந்த இடங்களுக்கு வர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பேசுகையில் ‘எதையும் துணிச்சலாக எதிர்கொள்பவர் அவரின் கடினமான உழைப்புக்கும், துணிச்சலுக்கும் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது’ என பேசினார்

About Author

You may have missed

error: Content is protected !!