March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மக்கள் விரோத போக்கு ஆட்சி நடைபெறுகிறது -கனிமொழி எம்.பி.பேச்சு

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை யில் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அந்தப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை போக்க திறந்தவெளி கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில் இப்பணி நிறைவு பெற்றதை அடுத்து அதன் திறப்பு விழா குத்துக்கல்வலசை யில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் துரை(எ)இராமையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, குற்றாலம் மந்திரம், பண்பொழி கரிசல்ராஜராஜன், சுந்தரபாண்டியபுரம் மாரியப்பன், கணக்கப்பிள்ளை வலசை சிவனுப் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குத்துக்கல்வலசை அழகுசுந்தரம் வரவேற்றுப் பேசினார். குத்துக்கல்வலசை ஊராட்சி செயலாளர் காசி கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் கலந்து கொண்ட எம்பி கனிமொழி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்து பேசியதாவது;-
நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது இந்தப் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் திறந்தவெளி கிணறு அமைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூபாய் 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தேன். நான் அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால் இந்த பகுதிக்கு நிதி உதவி செய்ய முடிந்தது. இப்போது நான் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இப்போது வழங்கப்படும் நிதியை தூத்துக்குடி தொகுதியில் தான் செலவழிக்க முடியும். எனினும் இந்த பகுதியை எனது சொந்த பகுதி போல் நினைத்து அனைத்து உதவிகளையும் செய்வேன்.

தற்போது குத்துக்கல்வலசை மட்டுமல்ல தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பெண்கள், முதியோர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் குடிதண்ணீருக்காக வெகு தூரம் நடந்துசென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதனை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி ஆட்சி தமிழக மக்களுக்கு விரோதமான ஆட்சி. இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு இவர்கள் இருக்கும் இடம் எது என்பது உங்களுக்கு தெரியும். மத்தியில் உள்ள பாஜக அரசின் அடிமை அரசாக தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை.
முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. ரேஷன் கடையில் பொருட்கள் கிடைப்பதில்லை. பஞ்சாயத்து தேர்தலை நடத்த கூட இவர்களால் முடியவில்லை. விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும். தலைவர் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏராளமான நலத்திட்டங்கள் அப்போது நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த எம்பி கனிமொழி குத்துக்கல்வலசை முருகேசன் இல்லம் சென்று புதிய மணமக்கள் அழகுசுந்தரம் – இசக்கி சொரூபா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்

மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுசுந்தரம் கனிமொழிக்கு வீரவாள் ஒன்றினை நினைவு பரிசாக வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் பாவூர்சத்திரம் திமுக பிரமுகர் தொழிலதிபர் காளிதாசன், முன்னாள் எம்எல்ஏ .ரசாக், மாநில மாணவரணி துணை அமைப்பாளர்.ஷெரீப், மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் .செல்லப்பா தென்காசி நகர திமுக செயலாளர் . உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி துணை செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!