May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நிவாரணம் வழங்க அரசிடம் போதுமான நிதி உள்ளது , மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

தமிழகத்தில் N95 கவசங்கள் போதுமான அளவில் இருப்பில் உள்ளன

தமிழகத்தில் சுமார் 10,000 பேரின் கண்காணிப்பு காலம் நிறைவடைந்துள்ளது

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்தவுடன் பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும்

தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன

ஊரடங்கை மீறியதாக இதுவரை 90,000பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தமிழக அரசு கேட்ட நிதி படிப்படியாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

தமிழகத்தில் 22,000 படுக்கைகள் சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளது
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது

பல பகுதிகளில் நடமாடும் காய்கறி கடைகளை ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு

மத்திய அரசு அனுமதித்தால் தமிழகத்தில் மொத்தம் 38 பரிசோதனை மையங்கள் செயல்படும்

தனிமைப்படுத்துவது மட்டுமே கொரானா பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரேவழி

பொதுமக்கள் நோய் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவர்களை அணுக வேண்டும்

பொதுமக்கள் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
மக்களின் நன்மைக்காகத்தான் ஊரடங்கு உத்தரவு , துன்புறுத்துவதாக அல்ல
வெளிநாடு & வெளிமாநிலம் சென்று திரும்பியோர் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்
சென்னையில் 37 பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது

அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டே உரிய உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

காவல் துறையினரின் கஷ்டத்தை மக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும்
10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்
21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளி தேர்வு குறித்து முடிவெடுக்க முடியும்
முதலமைச்சர் பழனிசாமி

About Author

error: Content is protected !!