May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்திற்கு தண்ணீர் ஆந்திர முதல்வர் உத்தரவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் கடந்த 5 மாதமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.பருவமழை பொய்த்து போனதால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து எதுவும் இல்லை. குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்க கிருஷ்ணா நதி நீரை கேட்டு பெறுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை ஆந்திரா சென்று பேசுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஆந்திரவிற்கு இன்று காலை அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும் அதிகாரிகளுடன் சென்றனர்.அங்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விடும்படி வலியுறுத்தினார்கள்.எனவே கிருஷ்ணா தண்ணீரை சென்னை குடிநீருக்காக உடனே திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆந்திர முதல்வர் தண்ணீர் தருவதாக உறுதியளித்தார்

About Author

You may have missed

error: Content is protected !!