February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, அக்., 16ல் துவங்கியது. இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் (அக்., 21) நாளையும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தென் தமிழகம் மற்றும் குமரி கடல் ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது

About Author

error: Content is protected !!