May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தங்ககத்திற்கு ஆசைப்படாத தங்கம்

கடையநல்லூர் பஜார் ரோட்டில் கண்டெடடுத்த தங்கச்செயின் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
பெண்னின் நேர்மையை காவல் துறை மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.
கடையநல்லூர் மெயின் பஜாரில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட தங்கச் செயினை காவல்துறை முன்னிலையில்  அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது
கடையநல்லூர் இரசாலிபுரம் தெருவில் குடியிருக்கும் மஞ்சி முகம்மது யாசின் மனைவி கலங்காத்தான் சாராபானு என்பவர் காலையில் பஜார் ரோட்டில் நடைபயிற்சியில் ஈடுபடும்போது அந்த வழியில் சாலையோரம் தங்கச் நெக்லஸ் கிடப்பதை பார்த்து கண்டெடுத்தார் ,அதை அருகில் உள்ள அப்சல் என்பவரிடம் கொடுத்து அங்குள்ள ஜமாஅத் மூலம் உரியவரிடம் கொடுக்கச்சொன்னார்
அதன்படி குறிச்சி சுலைமானிடம் தகவல் தெரிவிக்க அவர் தனது முகநூல் பக்கத்திலும் வாட்ஸ்அப் குரூப்பிலும் இது குறித்து அறிவிப்பு செய்தார் அப்போது முகநூலில்  செய்தியை பார்த்த மஹ்பூபாவின் உறவினர் காணபோன செயின் குறித்த விபரங்களை சொன்னார்.அதன் பின்னர் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கோவிந்தனிடம் குறிச்சி சுலைமான் தங்கச்செயினை ஒப்படைத்து விபரத்தை சொன்னார் அதன்பின்னர் செயினை தவற விட்ட கலில்ரஹ்மான் மனைவி மஹ்பூபா( 55)
மற்றும் சாலையோரம் செயினை கண்டெடுத்த மஞ்சி முகம்மது யாஸின் மனைவி சாராபானு ஆகியோரை காவல் நிலையம் வரவழைத்து தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை தலைவர்  குறிச்சி சுலைமான் முன்னிலையில் காவல் ஆய்வாளர் கோவிந்ன் விசாரணை செய்து முறையாக தங்க செயினை உரிமையாளரிடம்  கொடுக்கப்பட்டது அப்போது காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் ,தனிபிரிவு ஏட்டு செய்யது அலி, மற்றும் அப்சல் ஆகியோர் உடன் இருந்தனர் அப்போது செயினை ஒப்படைத்தை பெண்னின் நேர்மையை காவல் ஆய்வாளர் கோவிந்ன் மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.

About Author

error: Content is protected !!