February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தகவல்கள் மக்களிடம் சேர அரசு ஊடக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் !- கல்வியாளர் ஜா.இராஜசேகரன்

தகவல்கள் தடையின்றி மக்களை சென்றடைய அரசு ஊடக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் !

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது துணான ஊடகத் துறையை காப்பாற்ற சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்குவது போல் நெருக்கடி காலத்தில் தாராள நிதியை ஒதுக்கீடு செய்து காப்பாற்ற வேண்டும்.

நான்காவது தூண்

நாளிதழ், சிற்றிதழ், வானொலி , தொலைக்காட்சி , இணையம் , வலையதள அமைப்புகள் , அலை கம்பங்கள் , இணைய வானொலிகள் , ஊடகங்களாக அறியப்பட்டுள்ளன. அரசியலமைப்பு , சட்ட ஒழுங்கு , நீதித்துறையை அடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வாழ்வியல் அறிவை ஜனநாயகப்படுத்தி விரிவுபடுத்த ஊடகத்துறை மகாத்தான பணியை செய்து வருகிறது. பிராந்தியமொழிகளும் கவனத்தோடு கையாளப்பட்டு வருகிறது.. ஊடகமெனும் மாபெரும் இயக்கம் நீதிக்கான சாத்திய கொள்கைகளை பரிணமிக்கும்போது இந்த சமூகம் மாபெரும் சக்தியாக உருவெடுக்கிறது. அச்சு ஊடகத்திலிருந்து தொலைக்காட்சி ஊடகங்கள் வித்தியாசமானவை.செய்தித்தாள்களை அடிப்படை கல்வியறிவு உள்ளவர்களே வாசிக்க முடியும். தொலைக்காட்சி பெருவாரியான மக்களை மூலைமுடுக்குகளிலும் ஊடுருவி சமூகத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தடை செய்ய வேண்டாம்

ஊரடங்கு நெருக்கடி காலத்தில் நிதி சிக்கனத்தை கடைபிடிக்க தரவரிசை அடிப்படையில் சில ஒதுக்கீட்டு நிதியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் பத்திரிக்கை , வானொலி , தொலைக்காட்சி ஊடகங்களுக்கு ஒத்துக்கீடு செய்யப்பட்ட தொகையை சேர்க்க வேண்டுகோள் வைக்கப்பட்டு வருகிறது. அரசு விளம்பரங்கள் வாயிலாக கிடைக்கும் வருமானம் ஊடகங்கள் அடிப்படை செலவுகளை சமாளிக்க உதவியாக உள்ளது..நாடு முழுக்க வலையதள வழியாக நிலவும் நம்பகத்தன்மையில்லா செய்திகள் மக்களிடம் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் நாட்டின் மூலைமுடுக்குகளில் வசிக்கும் மக்களிடமிருந்து தகவல்களை திரட்டி அச்சுகளில் அரங்கேற்றியும் தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தியும் உண்மைச்செய்திகளாக வெளியிட்டு வருகிறது.

கடும் நிதி நெருக்கடி

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஊடகங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் மத்திய , மாநில அரசுகள் வெளியிடும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டால் ஊடகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி விடும். ஊடகங்கள் இந்தியாவை பொறுத்தவரை அந்தந்த மாநில மக்களுக்கு அவர்கள் மொழியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு தேவையான தகவல்களையும் வழங்கிவருகிறது. அரசின் திட்டங்கள் அறிவிப்புகள் உள்ளூர் தகவல்களும உடனுக்குடன் மக்களை சென்றடைகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து 20 சதவித ஊடக வருமான இழப்பை சந்தித்து வருகிறது.

செய்திதாள்களுக்கு சலுகை.

இந்திய செய்திதாள்களின் அமைப்பின் (ஐஎன்எஸ்) அங்கமாக செயல்பட்டுவரும் நாடு தழுவிய செய்திதாள்கள் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக வருவாயின்றி பாதிக்கப்பட்டு வருகிறது. தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதால் ஊடக விளம்பரங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. அச்சு ஊடகங்கள் அச்சு மற்றும் செய்தித்தாள் தயாரிப்பு செலவுகளில் மிகச்சிறிய பகுதியை வாசகர்களிடம் விலையாக பெறப்படுகிறது.. சிறிய நடுத்தர செய்திதாள்கள் பத்திரிக்கை வெளியிடுவதை நிறுத்தி விட்டன. பெரிய பத்திரிக்கைகள் பக்கங்களை குறைத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

வரிவிலக்கு

செய்தித்தாள், தொலைக்காட்சி ஊடகங்கள் சில காலம் வரிவிலக்கு கோரியுள்ளன.. செய்தித்தாள்களுக்கான அரசு நிதி ஒதுக்கீட்டை 100 சதவிதம் அதிகரித்தால் செய்தித்தாள்களை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்களிலிருந்து மீண்டு வர முடியும். மத்திய அரசின் விளம்பர செலவு செய்திதாள்களின் வாசகர்கள் , தொலைக்காட்சிகளின் பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் ( DAVP) விளம்பர வெளியீட்டு அமைப்பு விளம்பர கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. அரசின் விளம்பரங்களை , எடுத்துக்காட்டாக மத்திய அரசின் சுகாதாரத்துறையின் விளம்பரங்களாக ஊடகங்களில் மத்திய அரசின் மலிவுவிலை மருந்தகங்கள், காசநோய் மற்றும் கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள் , போலியோ விளம்பரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதைப் போன்று மத்திய அரசின் அனைத்து துறை விளம்பரங்களை வெளியிட ரூ 4343 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தயை நிதியை ஊடகங்களுக்கு வழங்காமல் முடக்கினால் நிதிச்சுமை ஏற்படும். எனவே நெருக்கடி கால செலவு பட்டியலில் ஊடக ஒதுக்கீட்டு தொகையை இணைக்க வேண்டும் .

ஊடக செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு

மருத்துவம் , காவல் , பொதுச் சுகாதாரம் போன்று உயிரியல் போர்களத்தில் ஊடக செய்திப் பிரிவும் களப்பணியில் துணை நிற்கிறது .செய்தியாளர்கள் , புகைப்பட கலைஞர்கள் , ஒளிப்பட நிபுணர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பகுதிகளின் நுழைவு வாயில்களை மூடும்போது அரசு அதிகாரிகளோடு ஊடக செய்திப் பிரிவும் பயணிப்பதால் அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும். மத்திய – மாநில அரசுகள் நிதிரீதியாகவும் ஊடகப் பணியாளர்களுக்கு சலுகை வழங்க வேண்டும். அரசின் அறிவிப்புகளை அப்படியே மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்களின் பணி அசாத்தியமானது. உலக சுகாதார அமைப்பு மத்திய மருத்துவ பாதுகாப்பு கவுன்சில் வழிகாட்டுதல்படி மத்திய மாநில அரசின் அறிவிப்புகளை ஊடகங்கள் மக்களிடத்தில் எடுத்துச் செல்கின்றன. தமிழகத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை (DIPR ) ஊடகங்களை ஒருங்கிணைத்து செய்திகளையும் , விளம்பரங்களையும் வழங்கிவருகிறது. மாவட்ட , வட்டார அளவில் இயங்கும் சிறிய ஊடகங்களையும் தேசிய , மாநில அளவில் இயங்கும் பெரிய ஊடகங்களையும் அதன் முழு நேர , பகுதி நேர , பகுதிவாரியான நிருபர்கள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்கள் , உதவி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சார்பு பணியாளர்களையும் நெருக்கடியான நேரத்தில் தொடர்ந்து வலிமையுடன் செயல்பட மத்திய – மாநில அரசுகள் ஆதரவளிக்க வேண்டும்.

அரசின் தகவல்கள் தடையின்றி மக்களை சென்றடைய உரிய வழிபிறக்கட்டும்….

                                             கட்டுரையாளர்ஜா.இராஜசேகரன்.
                                             கல்வியாளர் ,சமூக ஆர்வலர்
மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்

About Author

error: Content is protected !!