May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஜெயலலிதா நினைவிடம் கட்டத் தடையில்லை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல். ரவி என்பவர் ஜெயலலிதாவுக்கு நினைவிட அமைக்க தடை கோரி வழக்குத் தொடர்ந்தார். அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒருவருக்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாக திகழும். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்தால் கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாக அமையும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்
குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் என்பதைக் காரணமாக வைத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு நிதியில் நினைவு மண்டபம் கட்டத் தடை விதிக்க முடியாது.
சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

About Author

error: Content is protected !!