May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஜெயலலிதாவின் பிறந்தநாள் மருத்துவ முகாம் ,குழந்தைகளுக்கு மோதிரம் நலதிட்ட உதவிகள் வழங்கினார் கே.ஆர்.பி.பிரபாகரன்

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா. அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன்

ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த குழந்ததைகளுக்கு மோதிரம் அணிவித்தார்

நெல்லை புறநகர் மாவட்ட அதிமுகவின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாள் விழாவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் அணிவித்தார்.

தென்காசி மாவட்டம் அருகே உள்ள கீழப்பாவூரில் அங்கு உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கீழப்பாவூர்  குரு சுவாமி திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மெயின் பஜார் ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் .

பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன் அணிவித்தார், இதேபோல் கரும்பனூர், மருதம்புத்தூர், முக்கூடல், இடைகால், பாப்பான்குளம், கடையம், கோவிலூற்று, ஆலங்குளம், நெட்டூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிறந்திருந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் அவைத்தலைவர் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், பாசறை செயலாளர் சேர்மப்பாண்டி, கீழப்பாவூர் நகர செயலாளர் ஜெயராமன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் யோகராணி, மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!