July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செல்வ வளம் பெரும் சித்தர் வழிபாடு

பரணி பூரம் பூராடம் கார்த்திகை உத்திரம் உத்திராடம் மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆயில்யம் கேட்டை ரேவதி அஸ்தம் ரோகிணி திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சித்தர் ரோம மகரிஷி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் ரோம மகரிஷி உரோமரிஷி சித்தர் புசுண்ட மாமுனிவரின் சீடராவர். உடல் முழுவதும் ரோமம் இருந்தபடியால் உரோமமுனி எனப்பட்டார். இவர் உடலிருந்து ஓர் ரோமம் உதிர்ந்தால் அதுபிரம்மாவின் ஒரு வாழ்நாளாகும். அவ்வாறு மூன்றரைக்கோடி ஆண்டுகள் பிறகுதான் இவருடைய வாழ்நாள் முடியும்.

கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கியிருந்து தவம் செய்து தாடி வழியே பொன் வரவழித்து மக்களுக்கு கொடுத்து வந்தார். ஒருநாள் தாடிவழி பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கி இறைவனை வழிபட நீராடாமல் கோவிலை அடைந்தார். நீராடாமல் வந்த உரோமரிஷியை விநாயகரும் முருகரும் தடுத்தனர். முனிவர் வருத்தமுற்று கோபுர வாயிலில் நின்றார். புறத்தூய்மையைவிட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் உரோமரிஷிக்கு சிவபெருமான் கோவிலுக்கு வெளியிலேயே தரிசனம் தந்தார். கயிலை சென்றார்.

வைத்தியம் 1000, சூத்திரம் 1000, ஞானம் 50, பெருநூல் 500, குறுநூல் 50, காவியம் 500, முப்பு சூத்திரம் 30, இரண்டடி 500, ஜோதிட விளக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

உரோமமுனி சித்தர் தியானப்பூசைக்கு

“கனிந்த இதயம், மெலிந்த உருவம், சொரிந்த கருணை,

சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை

அடக்கி அருள் அள்ளியே தருவாய் தாடியில்

தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம்”

தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் ஸ்ரீ உரோமரிஷி திரு உருவப் படத்தை வைத்து குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வம், ஜாதிமல்லிகை மற்றும் மல்லிகை மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.

உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி

காலத்தை கடந்தவரே பொற்றி

காகபுஜண்டரால் பூசிக்கப்படுபவறே போற்றி

கைலாயத்தில் வாசம் செய்யும் உரோமரிஷியே போற்றி

சங்கீதபிரியரே போற்றி

சந்திரனை தரிசிப்பவரே போற்றி

சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி

சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி

மகாலட்சுமியின் அருள் பெற்றவரே போற்றி

முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி

தடைகளை நீக்குபவரே போற்றி

தெய்வீகச் சித்தரே போற்றி போற்றி

நிவேதனமாக இஞ்சி இல்லா மிளகு, சீரகம் கலந்த பொங்கல், பழங்கள் இவற்றுடன் வெள்ளை வஸ்திரம் வைத்து திங்கள்கிழமை வழிபடின் சிறப்பு,

தியானபூசைப்பலன்கள்

சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் சந்திர கிரக தோஷங்கள் நீங்கும். மன வியாதி, மன அழுத்தம், மனப் புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். முடிவெடுக்கமுடியாத குழப்பங்கள் நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும். சஞ்சல புத்தி நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் குறைந்து மகிழ்ச்சி நிலவும். படிப்பிலும் தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும்.
ஓம் கைலாய வாசி ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி”
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள் உரோமரிஷி சித்தர் :
நற்பவி.
———————–

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோம முனி என்று பெயர் பெற்றார். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை வியாநகரும், முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.

புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம். ரோமரிஷி படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும்.

ஜாதி புஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும்.

பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். ரோமரிஷி சித்தர் சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால், மனோன்மணி சதக்கி பெருக வேண்டுமென்றால், சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும்.

இவரை முறைப்படி வழிபட்டால் மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும். சஞ்சல புத்தி நீங்கும். படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். இவரை திங்கள்கிழமை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

?ஓம் நமசிவய?

சிவ சிவ பதினெண்சித்தர் பாதம் போற்றி!

உரோமரிஷி ஞானம்

தேகமைந்தின் விளக்கம்

தேகம் ஐந்து வகை
=================

இருள் தேகம், மருள்தேகம், சுத்ததேகம்,
பிரணவதேகம், ஞானதேகம்.

இருள்தேகமாவது:–

தூல தேகத்தில் அபானத்தில் மலக்குற்றம், நாவில் நாடிக்குற்றம், கண்டத்தில் கபக்குற்றம், மேல்
மூலத்தில் திரைக்குற்றம், மனத்தில் ஆணவமலக்குற்றம் ஆகிய இவை யாவும்
பொருந்தி நான் என்னும் அஞ்ஞானக்குற்றத்தை வகித்திருப்பது.

மருள்தேகமாவது:—

மாயா சம்பந்தமாய் தனக்கு வருவதை பகுத்தறிய மாட்டாது, அகங்காரத்தைக் கொண்டிருப்பது.

சுத்ததேகமாவது:—

கருவிகரணாதிகள் ஓய்ந்து அறிவு தானே விளங்கிப் பார்க்கப்
படும் பொருளைனைத்தும் அருள் வடிவமாய் தோன்றி நிற்பது.

பிரணவதேகமாவது:—

உருவம் தோன்றி
கைக்கு அகப்படாது நிழற்சாயலில்லா திருப்பது.

ஞானதேகமாவது:—

கண்களுக்குத் தோன்றாது அறிவுக்கு மட்டும் தோன்றி நிற்பது.

ஆகையால் இத்தேகங்களில்,அறிவுக்கு
மட்டும் தோன்றி நிற்பதான ஞானதேகமே
மேலானதாகும்.

அத்தகைய ஞானதேகத்தைப் பெறவேண்டுமானால் பற்பல காய கற்பங்களை உண்ணவேண்டும்.

உரோமரிஷி உண்ட காயகற்பங்கள்:–

ஏரழிஞ்சில் வித்து, செங்கெடிவேலி, கருங்கொடிவேலி ஆகிய கற்பமூலிகைகள்
ஆகும்.

உரோமரிஷி மூல மந்திரம்…

“ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!”

தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.

அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.

அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது.

நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.

மூன்றாவது தலமாக வருவது சேரன்மாதேவி சிவன் கோவில் இது நவகைலாச தலங்களில் இரண்டாவது தலமாகும், இதுவும் தாமிரபரணி தென்கரையில் அமைந்துள்ளது.

மூலவர் … அம்மநாதர் உடன்உறை ஆவுடைநாயகி

ஸ்தல விருட்சம் … பலா மரம்

தீர்த்தம் …. தாமிரபரணி

ஸ்தல சிறப்பு ;

இத்தலம் நவ கைலாயங்களில் இரண்டாவது தலம், இங்கு கொடிமரம்அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்.

பிராத்தனை ;

அரிசி வியாபாரம் செழிக்க சுவாமிக்கு அரிசிநேர்த்திக்கடன் செலுத்துகின்றனர், சுவாமி அம்மாளுக்கு வஸ்திரம் சாத்தி அபிசேகம் செய்து நேர்த்திக் கடன் செய்கின்றனர்.

பெருமை ;

தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவனை அம்மையப்பர் என்று அழைக்கின்றனர், சன்னதிக்குவலப்புறம் ஆவுடைநாயகி அருள் புரிகிறாள்.
சிவன் அம்மாள் திருமணக் கோலத்தை இக்கோவிலில் நந்தனார் தரிசிக்க சென்றபோது, கொடிமரத்தின் கீழே நந்தனார் வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகி இருப்பது இக் கோவிலின் சிறப்புத் தன்மையாகும். கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்,
இக்கோவிலைக் கட்டிய சகோதரிகள் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம் முன் மண்டபத்தில் தூணில் காணலாம், மற்றொரு தூணில் உரோமசர் முனிவரின் சிற்பத்தையும் காணலாம்,

வரலாறு;

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமசர் முனிவர் அகத்தியரின் ஆலோசனப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார்,அதில் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடமே இத்தலம். இங்கு உரோமர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார், அது பிற்காலத்தில் கோவில் இன்றி ஒரு அரசமரத்தடியில் இருந்தது. இப்பகுதியில் வசித்த சிவபக்தையான இரு சகோதரிகள் ெநல்குத்தி, அரிசி புடைக்கும் தொழில் செய்து பிழைத்து வந்தனர், இவர்கள் தினமும் இந்த லிஙகத்திற்கு பூசை முடித்தபின்னரே தனது பணிகளை செய்யும் பழக்கம் உள்ளனர். இவர்களின் மனதில் இந்த லிஙகத்திற்கு ஒரு கோவில் கட்ட வேண்டுமென ஒரு ஆதாங்கம் இருந்து வந்தது, ஆனால் தஙகளிடம அந்த அளவிற்கு செல்வம் இல்லாதது கண்டு மனம் வருந்தி இருந்தனர், இருப்பினும் எப்படியும் கோவில் கட்ட வேண்டும் என்ற ஆதாங்கத்தில் தங்களுக்கு வரும் வருமானத்தில் சிறுசிறு தொகையாக சேர்த்து வைத்து வந்தனர், இவர்களின் பக்தியை அறிந்த கைலாசநாதர், ஒருநாள் சிவ
னடியார் வடிவில் இவர்களின் இல்லத்திற்கு வந்தார், அவரை சகோதரிகள் இன்முகத்தோடு வரவேற்று அமுது படைக்க அழைத்தனர், அப்போது வீட்டில் ஒரு தீபம் கூட எரியவில்லை. விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருக்கும், மங்கலம் எப்படி இருக்கும் எனவே ஈசனார் மங்களம் இல்லாத வீட்டில் நான் உணவருந்த மாட்டேன் என்று கூறினார், உடனே தீபம் ஏற்ற விளக்கை தேடினர், ஆனால் அவசரத்தில் அதுவும் கிடைக்கவில்லை. உடனே பூசைக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் தீபம் ஏற்றினர், இதனை மகிழ்ந்த சிவனார், சுய ரூபம் காட்டி அவர்களை ஆசீர்வதித்தார், உடனே இவர்
களுக்கு செல்வம் பெருகியது.உடனே தாங்கள் வணங்கி வந்த லிஙகத்திற் கோவில்கட்டி முடித்தனர், அவரகள் கட்டிய கோவி்ல்தான் இன்றளவும் உள்ளது.
எனவே பக்தியுடன் தொடர்நது வழிபட்டு வந்தால், சிவன் அருள்கிட்டும்.
______________
உரோமரிஷி

காகபுசுண்ட முனிவரின் புதல்வர், உரோமரிஷி பற்றிய விளக்கங்கள் அபிதான சிந்தாமணியிலே கூறிவுள்ளனர்.

உரோமரிஷியின் தந்தை செம்படவர் குலத்தையும், தயார் குறவர் குலத்தையும் சேர்த்தவர்கள்.இவர்களுக்கு பிள்ளையாய் உரோமரிஷி, ஆவணி மாதம் காத்திகை மூன்றம் பாதத்தில் பிறந்தார் என்று போகர் தம்முடய நூலில் கூறிவுள்ளனர்.

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம் 1000
உரோமரிஷி சூத்திரம் 1000
உரோமரிஷி ஞானம் 50
உரோமரிஷி பெருநூல் 500
உரோமரிஷி குறுநூல் 50
உரோமரிஷி காவியம் 500
உரோமரிஷி முப்பு சூத்திரம் 30
உரோமரிஷி இரண்டடி 500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி,
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான
“ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி”

என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்:

இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்…

1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்,
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.

திருச்சிற்றம்பலம்

நற்பவி.
ஓம் சர்வ நமசிவாய நமக்கு.உரோமரிஷி சித்தர் :
நற்பவி.
———————–

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோம முனி என்று பெயர் பெற்றார். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை வியாநகரும், முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.

புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம். ரோமரிஷி படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும்.

ஜாதி புஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும்.

பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். ரோமரிஷி சித்தர் சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால், மனோன்மணி சதக்கி பெருக வேண்டுமென்றால், சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும்.

இவரை முறைப்படி வழிபட்டால் மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும். எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும். சஞ்சல புத்தி நீங்கும். படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். இவரை திங்கள்கிழமை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

?ஓம் நமசிவய?

சிவ சிவ பதினெண்சித்தர் பாதம் போற்றி!

உரோமரிஷி ஞானம்

தேகமைந்தின் விளக்கம்

தேகம் ஐந்து வகை
=================

இருள் தேகம், மருள்தேகம், சுத்ததேகம்,
பிரணவதேகம், ஞானதேகம்.

இருள்தேகமாவது:–

தூல தேகத்தில் அபானத்தில் மலக்குற்றம், நாவில் நாடிக்குற்றம், கண்டத்தில் கபக்குற்றம், மேல்
மூலத்தில் திரைக்குற்றம், மனத்தில் ஆணவமலக்குற்றம் ஆகிய இவை யாவும்
பொருந்தி நான் என்னும் அஞ்ஞானக்குற்றத்தை வகித்திருப்பது.

மருள்தேகமாவது:—

மாயா சம்பந்தமாய் தனக்கு வருவதை பகுத்தறிய மாட்டாது, அகங்காரத்தைக் கொண்டிருப்பது.

சுத்ததேகமாவது:—

கருவிகரணாதிகள் ஓய்ந்து அறிவு தானே விளங்கிப் பார்க்கப்
படும் பொருளைனைத்தும் அருள் வடிவமாய் தோன்றி நிற்பது.

பிரணவதேகமாவது:—

உருவம் தோன்றி
கைக்கு அகப்படாது நிழற்சாயலில்லா திருப்பது.

ஞானதேகமாவது:—

கண்களுக்குத் தோன்றாது அறிவுக்கு மட்டும் தோன்றி நிற்பது.

ஆகையால் இத்தேகங்களில்,அறிவுக்கு
மட்டும் தோன்றி நிற்பதான ஞானதேகமே
மேலானதாகும்.

அத்தகைய ஞானதேகத்தைப் பெறவேண்டுமானால் பற்பல காய கற்பங்களை உண்ணவேண்டும்.

உரோமரிஷி உண்ட காயகற்பங்கள்:–

ஏரழிஞ்சில் வித்து, செங்கெடிவேலி, கருங்கொடிவேலி ஆகிய கற்பமூலிகைகள்
ஆகும்.

உரோமரிஷி மூல மந்திரம்…

“ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!”

தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.

அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.

அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது.

நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.

மூன்றாவது தலமாக வருவது சேரன்மாதேவி சிவன் கோவில் இது நவகைலாச தலங்களில் இரண்டாவது தலமாகும், இதுவும் தாமிரபரணி தென்கரையில் அமைந்துள்ளது.

மூலவர் … அம்மநாதர் உடன்உறை ஆவுடைநாயகி

ஸ்தல விருட்சம் … பலா மரம்

தீர்த்தம் …. தாமிரபரணி

ஸ்தல சிறப்பு ;

இத்தலம் நவ கைலாயங்களில் இரண்டாவது தலம், இங்கு கொடிமரம்அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்.

பிராத்தனை ;

அரிசி வியாபாரம் செழிக்க சுவாமிக்கு அரிசிநேர்த்திக்கடன் செலுத்துகின்றனர், சுவாமி அம்மாளுக்கு வஸ்திரம் சாத்தி அபிசேகம் செய்து நேர்த்திக் கடன் செய்கின்றனர்.

பெருமை ;

தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவனை அம்மையப்பர் என்று அழைக்கின்றனர், சன்னதிக்குவலப்புறம் ஆவுடைநாயகி அருள் புரிகிறாள்.
சிவன் அம்மாள் திருமணக் கோலத்தை இக்கோவிலில் நந்தனார் தரிசிக்க சென்றபோது, கொடிமரத்தின் கீழே நந்தனார் வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகி இருப்பது இக் கோவிலின் சிறப்புத் தன்மையாகும். கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்,
இக்கோவிலைக் கட்டிய சகோதரிகள் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம் முன் மண்டபத்தில் தூணில் காணலாம், மற்றொரு தூணில் உரோமசர் முனிவரின் சிற்பத்தையும் காணலாம்,

வரலாறு;

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமசர் முனிவர் அகத்தியரின் ஆலோசனப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார்,அதில் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடமே இத்தலம். இங்கு உரோமர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார், அது பிற்காலத்தில் கோவில் இன்றி ஒரு அரசமரத்தடியில் இருந்தது. இப்பகுதியில் வசித்த சிவபக்தையான இரு சகோதரிகள் ெநல்குத்தி, அரிசி புடைக்கும் தொழில் செய்து பிழைத்து வந்தனர், இவர்கள் தினமும் இந்த லிஙகத்திற்கு பூசை முடித்தபின்னரே தனது பணிகளை செய்யும் பழக்கம் உள்ளனர். இவர்களின் மனதில் இந்த லிஙகத்திற்கு ஒரு கோவில் கட்ட வேண்டுமென ஒரு ஆதாங்கம் இருந்து வந்தது, ஆனால் தஙகளிடம அந்த அளவிற்கு செல்வம் இல்லாதது கண்டு மனம் வருந்தி இருந்தனர், இருப்பினும் எப்படியும் கோவில் கட்ட வேண்டும் என்ற ஆதாங்கத்தில் தங்களுக்கு வரும் வருமானத்தில் சிறுசிறு தொகையாக சேர்த்து வைத்து வந்தனர், இவர்களின் பக்தியை அறிந்த கைலாசநாதர், ஒருநாள் சிவ
னடியார் வடிவில் இவர்களின் இல்லத்திற்கு வந்தார், அவரை சகோதரிகள் இன்முகத்தோடு வரவேற்று அமுது படைக்க அழைத்தனர், அப்போது வீட்டில் ஒரு தீபம் கூட எரியவில்லை. விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருக்கும், மங்கலம் எப்படி இருக்கும் எனவே ஈசனார் மங்களம் இல்லாத வீட்டில் நான் உணவருந்த மாட்டேன் என்று கூறினார், உடனே தீபம் ஏற்ற விளக்கை தேடினர், ஆனால் அவசரத்தில் அதுவும் கிடைக்கவில்லை. உடனே பூசைக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் தீபம் ஏற்றினர், இதனை மகிழ்ந்த சிவனார், சுய ரூபம் காட்டி அவர்களை ஆசீர்வதித்தார், உடனே இவர்
களுக்கு செல்வம் பெருகியது.உடனே தாங்கள் வணங்கி வந்த லிஙகத்திற் கோவில்கட்டி முடித்தனர், அவரகள் கட்டிய கோவி்ல்தான் இன்றளவும் உள்ளது.
எனவே பக்தியுடன் தொடர்நது வழிபட்டு வந்தால், சிவன் அருள் கிட்டும்

ஜோதிடர் பிரேம் சந்த் நம்பிராஜன் 77088 73905

ஜோதிடர் முகவரி

About Author

error: Content is protected !!