June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செய்தியாளர் மீது தாக்குதல் -தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கம் வன்மையாக கண்டிக்கிறது

சமீபகாலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில போலீசார் செய்தியாளர்களுக்கு எதிராகவும், செய்தி போடுவதை வைத்து காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு போடுவதும் என தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.சில மாதங்களுக்கு முன் பாலிமர் தொலைக்காட்சியின் சென்னை தலைமை செய்தியாளர் வேல்ராஜிடம் பகைமை காரணமாக வேண்டுமென்றே வம்பிழுத்து அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது நடந்தது.இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் பாலிமர் செய்தியாளர் முத்துப்பாண்டி, தட்டார்மடம் ஆய்வாளர் ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததை பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் பேரில் செய்தியாக்கியதையடுத்து அவர் மீது பொய் வழக்கு ஒன்றை காழ்ப்புணர்ச்சியுடன் பதிவு செய்ய முயற்சித்தார்.
அதை சங்கம் தலையிட்டு தடுத்தது. அதன் பின்னரும் அந்த செய்தியாளர் மேல் கோபத்தில் இருந்த தட்டார்மடம் ஆய்வாளர் ராஜேந்திரன் நேற்றைய தினம் வழக்கறிஞர்கள் செய்தி ஒன்றை அவர் பதிவு செய்ததற்காக ரவுடி ஒருவனை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக பாலிமர் செய்தியாளர் முத்துப்பாண்டி உயிர் பிழைத்துள்ளார். ஆனால் அவர் கைகளில் வெட்டுப்பட்டு விரல்கள் துண்டிக்கப்பட்டு காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தியாளர்கள் மீதான சில காவலர்களின் இத்தகைய வன்மப்போக்கு தொடர்ச்சியாக தொடர்வதை வன்மையாக கண்டிக்கின்றோம். ஏற்கனவே தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் முன்விரோதத்தால் செய்த செயல்களை மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வானளாவிய அதிகாரம் உள்ளதாக அவர் செயல்பட்டு ரவுடி ஒருவரை ஏவி தாக்குதல் நடக்க காரணமாக இருந்துள்ளார்.
இதுகுறித்து காவல் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர்- காவலர்கள் நலம், பரஸ்பர உறவு மேம்பட ஒத்துழைக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். பாலிமர் செய்தியாளர் முத்துப்பாண்டியை கொலைவெறியுடன் தாக்கிய ரவுடியை கைது செய்யவும் ஏவிய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.என
பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்க பொதுச்செயலாளர் மிதார் மைதீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!