May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செங்கோட்டை நகராட்சி கொஞ்சம் கவனிக்குமா.

செங்கோட்டை நகராட்சி கொஞ்சம் கவனிக்குமா

செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆனந்த் திரையரங்கம் மேல்புறம் காமராஜர் காலணி செல்லும் சாலைதான் மலைப்பாதை போல இருக்கிறது என்றாலும் அந்த பகுதி மக்களுக்கு செல்லும் தாமிரபரணி குடிநீர் வால்வு திறந்து விடும் பகுதி உள்ளது. இதன்மூலமாக இப்பகுதியில் அமைந்துள்ள தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.தற்போது குடிநீர் வால்வு திறந்துவிடும் பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனால் குடிநீர் குளம் போல் தேங்கியுள்ளது.மேலும் இதனுடன் குப்பைகள் கிடப்பதால் தண்ணீர் அசுத்தமாகி குடிநீருடன் கலந்து வருகிறது.இதனால் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.இங்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் வால்வு பகுதியை உடனடியாக சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கை.

About Author

You may have missed

error: Content is protected !!