May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செங்கோட்டையில் ரூ 20 லட்சம் மதிப்புள்ள புகையிலை தீ வைத்து அழிக்கப்பட்டது

20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், நீதிமன்ற
உத்தரவுப்படி தீ வைத்து அழிக்கப்பட்டது.

தமிழக – கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகள் வழியாக கேரளா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக், புகையிலை, குட்கா, உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகி வந்துள்ளது. பெங்களுரு, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கிவைத்தும், வாகனங்களில் கேரளாவுக்கு கடத்துவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் துறை உத்தரவுப்படி கடந்த ஆண்டு செங்கோட்டை, புளியரை பகுதிகளில் சோதனை நடத்தபட்டு பல லட்சக்கணக்கான புகையிலை பொருட்கள் பிடிபட்டது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட அனைத்து பான்பராக், புகையிலை, குட்கா, பொருட்களையும் செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி இன்று அழிக்கப்பட்டது.
செங்கோட்டை – சுரண்டை சாலையில் செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான ஒரு கிடங்கில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார், நீதிமன்ற அலுவலர்கள் உள்ளிட்டோர் முன்பு கொட்டி 20 இலட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீவைத்து அழிக்கப்பட்டன.

அதன் வீடியோ காண  https://youtu.be/a7pHe3gZEhU

About Author

You may have missed

error: Content is protected !!