February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சி.சி.டி .வி.,யால் மாட்டிக்கொண்ட பைக் திருடர்கள்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர்; செல்வமணி மகன் பிராங்ளின் (25). வேன் டிரைவர். இரவு தனது பைக்கை மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார் காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து அருகில் உள்ள கடைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 5 மணியளவில் ஒரு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் பைக்கின் பூட்டை உடைத்து எடுத்துச்செல்லும் காட்சி பதிவானது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே பைக் திருடர்கள் குறித்த வீடியோ காட்சி பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரவியதையடுத்து  திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் தான் இத்திருட்டில் ஈடுபட்டுள்ளது அங்குள்ள வேன் டிரைவர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து பாவூhச்த்திரம் பகுதி வேன் டிரைவர்கள் சிலர் அங்கு சென்று பதுங்கி இருந்த இருவரை பிடித்து, பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பாளையங்கோட்டை சமாதானபுரம் என்.கே.பி. நகரை சேர்ந்த ரவி மகன் அஜித் (19), சமாதானபுரம் ஆசாத்தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் சபரி விக்ரம் (19) என்பதும், குற்றாலம் குளித்து சென்று ஊர் திரும்பிய போது, பைக்கை திருடியதும் தெரியவந்தது. மேலும் திருடிய பைக்கை ஆலங்குளம் வரை கொண்டு சென்று, அங்கு வைத்து வயரை கழற்றி பைக்கை இயக்க முயன்றததும், முடியாததால் அங்குள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் நிறுத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ஆலங்குளம் சென்று பைக்கை மீட்டனர். மேலும் இத்திருட்டில் ஈடுபட்டு தலைமறைவான செந்தில் (19) என்பவரை தேடி வருகின்றனர்.வெறுமனே வீடியோ பார்த்தோம் ஷேர் செய்தொம் என்றில்லாமல் சமூக அக்கறை கொண்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த ஓட்டுநர்களுக்கும் வாழ்த்துகள்

About Author

error: Content is protected !!