May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சிறுவர்களின் விநாயகர் பக்தி

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக பிரம்மாண்ட சிலைகள் அமைத்து கொண்டாடப்பட்டு வருகிறது, தமிழகம் முழுவதும் 25ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது ,திருநெல்வேலி மாவட்டத்தில் 590 இடங்களிலும், மாநகரில் 48இடங்களிலும் மொத்தம் 638 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் பள்ளி சிறுவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து களிமண்ணில் விநாயகர் உருவம் செய்து தங்கள் சேமிப்பு பணத்தில் இருந்து விநாயகரை அலங்கரத்து வீதி வீதியாக ஊர்வலமாக எடுத்து சென்றுவருகின்றனர் ,

இதைப்பார்க்கும் அனைவரும் நின்று வணங்கி தங்களால் இயன்ற காணிக்கை செலுத்தி வருகின்றனர்

About Author

error: Content is protected !!