May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சாலையில் தேவையின்றி சுற்றியவர்களுக்குஅறிவுரை வழங்கிய உதவிஆய்வாளர் சுரேஷ்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது

மேலும்  பொதுமக்கள்தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக  மட்டுமே வெளியே வரலாம் என்ற உத்தரவு உள்ளது

இதைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு காரணம் சொல்லி பொதுமக்கள் ப லர் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்

இன்று தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பேருந்து நிலையம் அருகிலுள்ள நான்குமுனை சந்திப்பில் பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சாலையில் தேவையில்லாமல் சாலைகளில் செல்லும் நபர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டார் , மெடிக்கல் ஷாப் வந்தவர்கள் உரிய  பில் அல்லது மருந்துகளை காண்பித்து அதன் பின் அனுப்பிவைக்கப்பட்டனர்

ஏடிஎம்மில் பணம் வந்தவர்கள் அதற்கான உரிய ரசீது அல்லது எஸ்எம்எஸ் போன்றவற்றை காண்பித்து சென்றனர்

தவிர மற்றவர்கள் சரியான காரணம் சொன்ன பிறகேஅனுமதிக்கப்பட்டனர்

காரணம் இல்லாமல் வந்த மற்றவர்களை இது போன்று வெளியில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் தேவையில்லாமல் வரக்கூடாது அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை குறித்தும், கொரோனா தொற்றின் அபாயங்கள் குறித்தும், சமூக விலகல் குறித்தும் எடுத்துரைத்தார்

பின்னர் அவர்களை இனி இது போன்று வெளியில் வந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்து அனுப்பி வைத்தார்

About Author

error: Content is protected !!