March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சர்.சி.வி. ராமனை பெருமைப்படுத்தும் தேசிய அறிவியல் தினம்

சர்.சி.வி. ராமனை பெருமைப் படுத்தும் வகையில், சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் தேசிய அறிவியல் தினம் நடந்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழக இயக்குநர் சந்தோஷ் கப்பூரியா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இயக்குநர் சாமிர் பிரம்மசாரி பங்கேற்று பேசினார்.
தேசிய அறிவியல் தினம், ஆண்டு தோறும் பிப்.28ம் தேதி கொண்டாடப்படுகிறது. சர்.சி.வி. ராமனை பெருமை படுத்தும் வகையில் கொண்டாடப்படும் தேசிய அறிவியல் தினம், அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் ஆகும்.தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ,1986ம் ஆண்டு தேசிய அறிவியல் தினத்தை அறிவித்தது.

அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக, ஐரோப்பாவில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு சர்.சி.வி. ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது இயற்கை மீதிருந்த ஆர்வம் காரணமாக வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்.தான் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியின் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று சிந்தித்தார். இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஆழப் பதிந்தது. இதற்காகப் பின்னாளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.இந்த ஆய்வுக்குத்தான் அவருக்கு நோபல் பரிசுக் கிடைத்தது.
இந்த ஆண்டு அறிவியலில் பெண்கள் என்ற கருப்பொருளில் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் முதன்மை விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் பாலாஜி ராவ், முதுநிலை விஞ்ஞானி ஆனந்தவள்ளி, முதன்மை விஞ்ஞானி ராஜாசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவசு

About Author

error: Content is protected !!