February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சமதர்மசமுதாயம் அமைந்திட ,மனித நேயம் மலர்ந்திட வேண்டும் -கேப்டன் புத்தாண்டு வாழ்த்து

தேசியமுற்போக்குதிராவிடகழகநிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன்விஜயகாந்த்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள
வாழ்து செய்தியில் இன்பம் பெருகும், துன்பம் ஒழியும், என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நன்நாளிலிருந்தாவது தங்கள் வாழ்க்கை மேன்மையடையும் என்கின்ற நம்பிக்கையிலேயே புத்தாண்டை எதிர்நோக்குகின்றனர். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டுமென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கேப்டன் வாழ்த்து

இந்த புத்தாண்டாவது சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும்.உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், ஆகிய மூன்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். வரும் 2019ஆம் ஆண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைந்து, வாழ்வாங்கு வாழ வேண்டுமென தேமுதிக சார்பில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

.

About Author

error: Content is protected !!