March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சசிகலா வெளியே வந்த பின்பு தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும்

சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் வரும் என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நெல்லை மாவட்ட மாநகர் செயலாளர் கல்லூர் வேலாயுதம் தென்காசியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நெல்லை அமமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கல்லூர் வேலாயுதம் இன்று மதியம் கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரனால் நீக்கபட்டார்.இதனை தொடர்ந்து தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது
தொண்டர்களுக்கு தலைமைக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது.ஆளும் கட்சியில் சம்பாத்தியம் பண்ண நாங்கள் அதிமுகவிற்கு செல்லவில்லை.சசிகலா கவனத்திற்கு இந்த நடவடிக்கைகள் எடுக்கபட்டது தெரியுமா என்று தெரியவில்லை.கட்சி நிர்வாகிகள் வெளியேறுவதற்கு மண்டல செயலாளர் மட்டுல்ல பொதுசெயலாளரும் காரணம் என்று குற்றசாட்டு.மாவட்ட செயலாளர் பொறுப்பில் நான் இருக்கும் போது ஒன்றிய செயலாளரை என் ஆலோசனை இல்லாமல் நீக்கியது தவறு என்று குற்றம் சாட்டினார்.அடிப்படையிலே பல முரண்பாடுகள் உள்ளன.கட்சியை வழி நடத்த தலைமை ஏற்க டிடிவி தகுதியான ஆள் இல்லை நம்பிக்கை குறைவான தலைவனின் கீழ் பணியாற்ற நான் தயாராக இல்லை.
தாய் கழகத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகள் துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்த அவர் சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் வரும் என்றும் தெரிவித்தார்

About Author

error: Content is protected !!