May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தூக்கு தண்டனை கைதி முருகன்

கொலையாளிக்கு தூக்கு தண்டனை தென்காசி கோர்ட் அதிரடி தீர்ப்பு

தூக்கு தண்டனை கைதி முத்துராஜ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் கடந்த 2016 ஆம் ஆண்டில் முத்துராஜ் என்ற ஆண்டவர் (32) என்பவர் அதே ஊரை சேர்ந்த கோவிந்த சாமி என்பவரது மகள் வழி பேத்தி கோமதி என்பவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் கோவிந்தசாமி என்பவர் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர் . அதனை ஆலங்குளம் போலீசார் விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்
இதனைத் தொடர்ந்து கடந்த 12.02.16 அன்று முத்துராஜ் (எ )ஆண்டவர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த கோவிந்தசாமி குடும்பத்தினரான கோவிந்த ராஜ் மகள் பேச்சித்தாய், பேச்சித்தாயின் மற்றொரு மகள் மாரி ஆகிய இருவரை வயல் வெளியில் வைத்து கொலை செய்து விட்டு கோவிந்த சாமியை கொலை செய்யப்போவதாக ஓடி உள்ளார் மீண்டும் கோவிந்தசாமி என்பவரை அந்த ஊரில் உள்ள சுடலைமாடசாமி கோவிலுக்கு அருகிலும் அரிவாளால் வெட்டிக் கொன்று ஓடியுள்ளார் இதனை அடுத்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து முத்துராஜ் என்ற ஆண்டவர் ஆண்டவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதி மன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் கொலைக் குற்றவாளியான என்ற ஆண்டவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் . இந்த வழக்கில் அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசந்திரன் அரசு தரப்பு சாட்சியங்களால் இந்த தண்டனை குற்றவாளிக்கு தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

About Author

error: Content is protected !!