May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் வீ. கே. புதூர் தாலுகா

கொரோனா தடுப்பு பாதுகாப்பில் ஏன் பாரபட்சம் ?

தென்காசி மாவட்டம் வீ. கே. புதூர் தாலுகா அலுவலகத்தில் கை கழுவும் பொதுமக்கள் 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ்  (  COVID-19 ) தாக்குதலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது இந்த பணி அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட தமிழக அரசின் சரியான நடவடிக்கை என பாராட்டியுள்ளார் , பொதுவாக தமிழ்நாட்டில் பொதுமக்கள் கூடும் இடங்கள் பேருந்து நிலையம் மற்றும் அரசு அலுவலர்கள் போன்ற இடங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன,

அரசு அலுவலகங்கள் வரும் பொதுமக்கள் , மற்றும் அதிகாரிகள் கைகளை கழுவி விட்டு வரும்படி அறிவிச்சிருக்காங்க நல்ல செயல் வாழ்த்துகள், ஆனால் கை கழுவ ஒரு பக்கெட்டில் தண்ணீர் , சோப்பு ,கை கழுவ திரவம் வைத்து இருக்காங்க எல்லாருமே பயன்படுத்தற மாதிரி வைத்து இருக்காங்க ஒருத் தர் பயன்படுத்திய சோப்பை இன்னொருவர் பயன்படுத்தும் போது ஒருவர்க்கு உள்ள தொற்று மற்றொருவருக்கு பரவ வாய்ப்பு இருக்கிறது, திரவத்தை ஒருவர் மட்டும் கொடுக்க மற்றொருவர் பயன்படுத்தும் படி செய்யலாம் ,
சட்டசபையில் நுழைவு வாயிலில் கை சுத்தம் செய்யும் திரவத்தை ஒருவர் கொடுக்கிறார் , இப்படி செய்வதே சரியான முறை ,
அரசு அலுவலங்கள் வரும் பல தரப்பட்ட பொதுமக்களில் யாருக்கு என்ன நோய் இருக்கு என யாருக்கும் தெரியாது சாதாரண காய்ச்சல் என கூட நினைக்கலாம்
எனவே தனியாக ஒரு நபரை கை கழுவ திரவம் மற்றும் , தண்ணீர் வழங்க நியமிக்கலாம் தொற்று நோய் ஏழை பணக்காரர் அரசியல்வாதி என்ற வேறுபாடு இல்லாமல் வருகிறது எனவே நகர்ப்புறத்தில் ஒரு மாதிரி , கிராமப் புறங்களில் ஒரு மாதிரி என்கிற நிலையை மாற்றி தமிழ்நாடு முழுவதும் ஒரே பாதுகாப்பு முறையை பின்பற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்

About Author

error: Content is protected !!