May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா தானத்தில் முன்மாதிரியான கமல்ஹாசன்

கொரோனா தானத்தில் முன்மாதிரியான கமல்ஹாசன்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ். இதன் காரணமாக இந்த வைரசை விரட்ட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சிராப்பள்ளி.மக்கள் நீதி மய்யம் கட்சி,கிழக்கு சட்டமன்ற தொகுதி,ஒருங்கிணைப்பாளர்,வக்கீல்.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இதன் காரணமாக தமிழக தன்னார்வலர்கள் வீடு இல்லாத ஏழை எளியோருக்கு உணவு, முககவசம், சானிடைசர் என தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பணியை செய்து வருகிறார்கள்.
ஆமாம் அரசியல் இயக்க தலைவர்கள் என்ன செய்கிறார்கள்….?
எதிலியுமே அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து பணிசெய்யும் சில தமிழக அரசியல் தலைவர்கள் வழக்கமான அறிக்கை கம் விழிப்புணர்வு பணியோடு நிறுத்தி கொண்டனர்.
ஆனால் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அதனையும் தாண்டி தான் வாழ்ந்த வீட்டைதற்பொழுது கட்சி அலுவலகமாக உள்ள ஆழ்வார்பேட்டை வீட்டை தமிழகத்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன் வந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதுஇந்திய அரசியல் தலைவர்களுக்கு முன் மாதிரியாக கருதப்படுகிறார். மேலும் தனது துறை சார்ந்த சினிமா கலைஞர்களுக்கும் 10இலட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பாகவே இரத்த தானத்தை வலியுறுத்தி இலட்சகணக்கான தன் தொண்டர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த கமல்ஹாசன் அவர்கள்_இதன் தொடர்ச்சியாக தனது கண் மற்றும் உடலை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
ஆனால் தற்பொழுது தனது வீட்டையும் கொரோனா பாதித்த நோயாளிகள் பயன்படும் வகையில் தற்காலிக மருத்துவமனையாக மாற்ற கோரிக்கை விடுத்திருப்பது உள்ளபடியே பெருமகிழ்ச்சி.
ஆனால் இதனை தமிழக அரசு ஏற்றுகொள்ளாது என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் தமிழக முன்னால் மற்றும் இன்னால் அரசியல் தலைவர்கள் கம் “கல்வி தந்தைகள்” இன்றும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். தற்பொழுது தமிழக அரசு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவித்திருப்பதும் நாம் அறிந்ததே. அவர்களுக்கெல்லாம் வராத மனம்_மக்கள் நீதி மய்யம் தலைவருக்கு வந்திருப்பதில் ஆச்சர்யபட ஒன்றுமில்லை.என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!