March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா தடுப்பு பணிகள்: இன்பதுரை எம்எல்ஏ தீவிரம்!

கொரோனா தடுப்பு பணிகள்:இன்பதுரை எம்எல்ஏ தீவிரம்!

ராதாபுரம் தொகுதி முழுவதும் கடந்த 15 நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்பதுரை எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தும் தீயணைப்பு வாகனம் மூலமாக தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பு பணிகளை துரித படுத்தியும் வருகிறார்.

அந்த சமயங்களில் இன்பதுரை எம்எல்ஏ தீயணைப்பு வாகனத்துடன் கூடவே தெருக்களில் நடந்து சென்று தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்குகிறார்.

நேற்று வள்ளியூர் ஒன்றியம் சிதம்பரபுரம் யாக்கோபுரம் மற்றும் சங்கராபுரம் கிராமங்களில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிப்பு பணிகளை இன்பதுரை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது வள்ளியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் அழகானந்தம் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் நேற்றுமுன்தினம் கூடங்குளம் பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் தீயணைப்பு வாகனம் கொண்டு கொரோனா தடுப்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்தப் பணிகளையும் இன்பதுரை எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

அப்போது வள்ளியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரதீப்குமார், ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷோர்,கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா, ஊராட்சி செயலாளர் சுதா மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!