May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா தடுப்பு களத்தில் பேட்டை தீயணைப்பு வீரர்கள்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணி மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது இதற்காக 21  நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்தியபிரதமர் மோடி, இந்தியா முழுவதும் பல    இதற்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென சிறப்பு தனி சிறப்பு குழுக்கள் அமைத்து பணிகள் நடந்து வருகின்றன சில பகுதியில் பொதுமக்கள் தண்ணீரில் மஞ்சள் கலந்து வீட்டு வாசலில் தெளிப்பது  அவர்கள் வசிக்கும் தெருவில் தெளிப்பது என செய்துகொண்டு வருகின்றனர்  மற்றொருபுறம் தன்னார்வலர்கள் மஞ்சள் தண்ணீரை பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தெளித்து வருகின்றனர் , தூய்மைப் பணியாளர்கள் வீதி தோறும்கிருமி நாசினி ஸ்ப்ரேஅடித்து வருகின்றனர்

இதேபோல் திருநெல்வேலி  பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ,மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பேட்டை வீரபாகு நகர் முனிசிபல் பஸ் நிறுத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதி மீனாட்சி தியேட்டர் வேன்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தீயணைப்பு வாகனத்தில்  தண்ணீரில் கிருமி நாசினி கலந்து அந்த தண்ணீரை குடியிருப்பு பகுதிகளில் பீச்சியடித்தனர். தீயணைப்பு வீரர்களின் இந்த செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

About Author

error: Content is protected !!