May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா குறித்த வதந்தி பரவுவது நீடித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சந்திக்க நேரிடும்

இந்தியாவில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் கொரோனா குறித்த வதந்திகள் அதிகளவில் பரவுவதாக தெரிவித்துள்ள சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இதே நிலை நீடித்தால் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நாடு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

போலி செய்திகள் பரவுவதை தடுக்கும்பொருட்டு பேஸ்புக் தனது முதன்மை பயனாளர்களின் பக்கத்தில் கொரோனா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பதிவிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பிலும் அதிகபட்சம் 5 பேருக்கு மேல் செய்திகளை பகிர முடியாதவகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், 40 கோடி வாட்ஸ் ஆப் பயனர்கள் 30 கோடி பேஸ்புக் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறும் நிபுணர்கள், போலி தகவல்களை உருவாக்குவோரை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

About Author

You may have missed

error: Content is protected !!