May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனாவை அழித்து ஆலயம் திறக்க அருள்புரிவாய் தாயே

அன்புள்ள பெரிய பிராட்டி தாயாருக்கு,

உங்கள் கோடான கோடி பக்தர்களில் ஒருவனான அடியேனின் நமஸ்காரம். லோகமே கொரோனா கொடூரனால் தவித்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் பெரும்பாக்கியமாக நினைத்து இந்த பூலோக வைகுந்தத்தில் வாழ்ந்து வருகிறேன். வாரம் தோறும் அரங்கனை சேவித்து வருகிறேன். பெருமாள் அவதாரம் எடுத்த யுகங்களில் கூட அரக்கர்களின் அட்டூழியத்தால் அரங்கனின் ஆலயம் பூட்டப் பட்டு இருக்காது.. சேவார்த்திகள் சேவிக்க எவ்வித தடையும் இருந்திருக்காது. இந்தக் கலியுகத்தில் கோவிலை பூட்டி விட்டார்கள். தங்களையும் பெருமாளையும் சேவிக்க முடியாமல் பக்த கோடிகள் தவிக்கிறோம். தாங்கள் சொன்னால் பெருமாள் கேட்பார். இந்த கொரோனோ அரக்கனை ஒழித்து மீண்டும் ஆலயம் திறக்கவும் பக்தர்களுக்கெல்லாம் பெருமாளை சேவிக்கும் பாக்கியமும் கிடைக்க பெருமாளிடம் பக்தர்களுக்காக எடுத்துச் சொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்வாமி நான் ஒன்று கேட்டால் தருவீர்களா?

என்ன வேண்டும் கேள் தேவி. நானே உனக்குத் தானே!!நீ கேட்டு நான் என்ன இல்லை என்று சொல்லியிருக்கிறேன். அது சரி நீ உனக்கென எதுவும் கேட்க மாட்டாயே? பக்தன் யாராவது சிபாரிசுக்கு வந்தானா?

உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை ஸ்வாமி. பூலோகத்தில் குரோனோ என்கிற அரக்கன் கொடூரங்கள் நிகழ்த்தி வருகிறான். மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நல்லவர் கெட்டவர் பாபிகள் மகான் கள் என யாரையும் விட்டு வைக்க வில்லை படாத பாடு படுத்திக் கொண்டு இருக்கிறான். பூலோக வைகுந்தம் என பக்தர்கள் கொண்டாடும் தங்கள் கோவிலையே இழுத்து மூடும்படியான நிலை உருவாகி விடடது. தங்களை சேவிக்க முடியாமல் பக்தர்கள் கிடந்து தவிக்கிறார்கள். அந்த அரக்கனை ஒழித்து மக்களை ஆபத்தில் இருந்து காக்கவும், மீண்டும் கோவில்கள் திறக்கவும் தய்வு செய்யுங்கள் ஸ்வாமி.

ஹ…ஹா…ஹா…

பக்தர்கள் தவிக்கிறார்களா?…

உன்னிடம் சிபாரிசுக்கு வந்தவன் அவன் தானே. வேலை இல்லாத விடுமுறை நாளில் மட்டும் கோவிலுக்கு வருவான். கூட்டமாக இருந்தால் க்யூவில் நிற்க பொறுமையின்றி போய்விடுவான். வெளியே போய் புளியோதரையும், தோசையையும் தொட்டுக்கொள்ள ஊறுகாய் வைத்து வாங்கி சப்பிட்டு விட்டு வெயிலுக்கு முன் வீட்டுக்குப் போய்விடுவான். அவனுக்கு நீ சிபாரிசா? வேடிக்கை தான் .

தேவி…
அந்த அரக்கனை நாங்கள் தான் உருவாக்கினோம்.

நாங்கள் என்றால்?

நான், சிவன், மருமான் முருகன் என எல்லோரும் சேர்ந்து தான் உருவாக்கினோம்.

ஏன் இந்த விபரீத முடிவு ஸ்வாமி.

பின்ன, எப்ப பார்த்தாலும் நச்சு நச்சுன்னு அதைகொடு, இதைகொடு, நீ அதை கொடுத்தால் நான் இதை கொடுக்கறேன் என்று ஒரே லவுகிக வேண்டுதல் கேட்டுக் கேட்டு காதே வலித்து விட்டது. கோவிலுக்குள்ளேயே எச்சில் துப்புகிறார்கள், அசிங்கம் செய்கிறார்கள். எனக்கு கண்ணிலேயே காட்டாமல் பிரஸாதம் என்று கடை போட்டு வியாபாராம் செய்கிறார்கள்.ஒரு டியூப் லைட் போட்டால் கூட உபயம் என்று பெருசா பேரை எழுதிக்கொள்கிறார்கள். இரவு தூங்கக் கூட விடாமல் விடிய விடிய சேவை க்கு திறந்து விடுகிறார்கள்.கோவில் இடத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டு தரை வாடகை கொடுக்கிறார்கள். ரூபாய்க்கு ஏற்ப வரிசையில் விட்டு சம்பாதிக்கிறார்கள். அதாவது பராவாயில்லை நான் துயிலும் ஆதிசேஷன் வம்சத்தையே வதக்கி சாப்பிடுவதும், மருமான் வாகனம் மயிலைக்கூட மசாலா போட்டு சாப்பிடுவதையும் எப்படி சகிக்க முடியும்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவும், கொஞ்சநாள் இந்த தொந்தரவுகளில் இருந்து விடுபடவும் நாங்கள் சேர்ந்து எடுத்து உருவாக்கிய வன் தான் கொரோனா. கவலை வேண்டாம் தேவி, மக்கள் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பதை விட்டு விட்டு உயிர் இருந்தால் போதும் என கூக்குரல் இடும் போது நான் மீண்டும் அவதாரம் எடுத்து நாங்கள் உருவாக்கிய அரக்கனை அழித்துவிடுவேன், அதுவரை சற்று பொறு.அதுவரை நாற்றம் இல்லாத, ஜன நெருக்கடி இல்லாத , சத்தமில்லாத, அதுவேண்டும் இது வேண்டும் என்கிற கோரிக்கை இல்லாத அமைதியை நாம் ஆலயங்களில் அனுபவிப்போம்.

வாட்ஸ் அப்பில் படித்ததை  உங்களோடு பகிர்கிறேன்

About Author

error: Content is protected !!