May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனாக்கு தீர்வு முன்னோர் வழிமுறை ? சமூக ஆர்வலர் இராஜசேகரன்

கோவிட்- 19 கோர தாண்டவம் விவசாய வாழ்வாதாரத்தை வேரோடு சாய்க்கிறதா ?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து மூன்று மாதங்களை கடந்துவிட்டனர் விவசாயிகள். குலதெய்வ வழிபாட்டுடன் பூப்பயிர்களை செய்து விளைச்சலை அறுவடை செய்ய தொடங்கிய நேரத்தில் அடிப்படையே ஆட்டம் காண வைத்தது கொரனாவைரஸ் விபரீத விளையாட்டுகள்.

நீண்ட ஓய்வை கொடுத்த கோவிட்– 19

மார்ச் 22ம் தேதி பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கையும் அதன் பின் 24 முதல் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட கடும் ஊரடங்கையும் விவசாய பெருமக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனெனில் தமிழகத்தில் பந்த் அல்லது கடையடைப்பு அறிவித்தால் விவசாயப் பணிகள் எப்பொழுதும் பாதிப்பதில்லை. தலைமுறைகள் கண்டிராத கொவைட் – 19 வைரஸ் பாதிப்பு வரும் என்ற தகவலால் வழிபாடுகளையும் பூஜை பரிவாரங்களையும் முன்னெடுக்கத் தொடங்கினர் .

பராம்பரிய கலாச்சார மூலிகை மருந்துகள்

கிராமங்களில் நம் முன்னோர்கள் வகுத்த பாதையில் கலாச்சார பண்பாட்டு நெறிகள் காத்து அருகில் கிடைக்கும் மூலிகைகள் கொண்டு கசாயம் தயாரித்து அருந்துவார்கள் சமீபகாலமாக நிலவேம்பு கசாயம் பப்பாளியிலை சாறு டெங்கு காச்சலில் இருந்து விடுபட பயன்படுத்தப்பட்டு வருகிறது.. மூலிகை பண்ணையில் கிடைக்கும் கபசுர குடிநீர் சமீப காலமாக பிரசித்திபெற்று வருகிறது

ஆவி பிடிப்பதன் அற்புதம்

இந்தியாவை 2020ல் கொடிய வைரஸ் தாக்கும் என்று கணித்து கூறிய ஜோதிட ஞானி 14 வயது பாலகன் அடிக்யா ஆனந்த் இந்திய பிறப்பு. கொரான தக்காமலிருக்க தண்ணீர் ,மஞ்சள் , எலுமிச்சை தோல் ,நசுக்கப்பட்ட இஞ்சி ,துளசியை கொதிக்கவைத்து தலையில் துணி போர்த்திஆவி பிடித்தால் போதும் என்று தெரிவித்த அவர் ,சூரிய ஒளியில் நிற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காவல் தெய்வங்கள்

கிராமங்களில் காவல்தெய்வங்களுக்கு காப்பு கட்டுவதும் ,ஊர் எல்லைகளில் வேப்பிலை தோரணங்கல் அலங்கரிப்பதும் ,மஞ்சள் நீர் தெளிப்பதுமாக பத்தி பரிவாரப்பணிகள் அரங்கோத் தொடங்கியது.. கோவில்களில் ஸ்கந்த ஹோமங்களும் , ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களில் வேப்பிலை தட்டுப்பாடு இருப்பதால் சமவெளிப்பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்கி பாதுகாப்பு வைபவங்களுக்கு பயன்படுதுவதுமாக பரவசமடைந்தனர் பல கிராம மக்கள் . ஒன்றுகூடி கூட்டுப் பிரார்த்தனையிலும் பங்கெடுத்தனர்

கடும் ஊரடங்கு நீட்டிப்பு

கிராமத்து மக்களால் மிக சாதாரணமாக அறியப்பட்ட கொவைட் – 19 தொடர்ந்து பரப்பப்பட்ட தொலைக்காட்சி செய்திகளும் வலையதளபதிர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அச்ச உணர்வை உள்வாங்கச்செய்தது. தன்னையும் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடு கிராமங்களின் நுழைவு வாயிலை அடைத்தார்கள் ,வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து தண்ணீரில் கரைத்து ஊரெங்கும் தெளித்து இயற்கை கிருமிநாசினியாக பயன்படுத்த தொடங்கினார்கள் .காலையும் ,மாலையும் காலார வயலுக்கும் தோட்டங்களுக்கும் பயணித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு முடக்கப்பட்ட செயலாக மனபுழுக்கத்தை ஏற்படுத்தியது.. உரம் ,பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டன.விவசாய வேலையாட்கள் பணிக்கு வர மறு போக்குவரத்து தடைப்பட்டது.. உள்ளமும் ஊனப்பட்டது. ஒளிந்து மறைந்து தோட்டத்துபக்கம் சென்றாலும் வாடிய பயிரும் விளைபொருட்களும் கண்களை ஈரமாக்கின.

சாலைகளில் கொட்டப்பட்ட விளை பொருட்கள்:

செங்கல்பட்டு , விழுப்புரம் ,திண்டிவனம் பகுதிகளி ல் விளைந்த தர்பூசணிப்பழங்கள் ,கிருஷ்ணகிரியில் பறிக்கப்பட்ட பன்னீர் ரோஜாப்பூக்கள் ,தேனி மாவட்டத்தின் கருப்பு திராட்சைபழங்கள் ,காஞ்சிபுரம் ,தஞ்சை ,திருச்சி , திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட. பல மாவட்டங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் முற்றி காய்ந்து கருகிய நெற்பயிர்கள் ,தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், பாவூர்சத்திரம் சுரண்டை பகுதிகளில் பறிக்க வழியில்லாமல் செடிகளில் கருகும் தக்காளி ,கத்தரி ,வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் தொடர்ந்து ஊடகங்களில் காண்பிக்கப்பட்டு வருவது விவசாயிகளின் இதயத்தில் சமெட்டி கொண்டு அடிப்பதை போல் உணர்ந்தார்கள் .

வேளாண் பணிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு

கடுமையான கோரப்பிடி கொரானா வைரஸ்ஸில் இருந்து மீண்டபின் உணவுப்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு வந்துவிடும். பஞ்சம்பட்டினி தலைவிரித்தாட தொடங்கி விடும் என்று இந்திய பொருளாதார ஆலோசகர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். அதன் பின் விவசாய பணிகளுக்கான உரம்” பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன இதனால் கோடைகால பயிர்களான பருத்தி ,நிலக்கடலை பயிர்களை காப்பாற்ற வழி பிறந்தது

வாழ்வாதாரத்தை சீர்குலைக்கிறதா

தமிழகத்தில் விவசாய உற்பத்தி 21 சதவிதமும் ,தொழில் வளர்சி மூலம் 34 சதவிதமும் ,சேவை பணிகள் மூலம் 45 சதவீதமும் வருமானமாக கொண்டு பொருளாதார ஆதாரங்கள்வரையறுக்கப்படுகிறது கோவையில் நெசவும் உதிரிபாகங்களும் ,ஈரோட்டில் மஞ்சளும் , ஆடை ஏற்றுமதியும் ,திருப்பூரில் ஆயத்த ஆடைகளும் ,நாமக்கல்லில் கோழிப்பண்ணைகளும் ,சிவகாசியில் பட்டாசும் ,வேலூரில் தோல் தொழில்களும் விவசாய உற்பத்தியை ஆதாரமாக கொண்ட ஒருங்கிணைந்த தொழில்களாக நடைபெற்று வருகிறது.

பொருட்களின் தேக்க நிலை

இந்திய அளவில் பயிரிடப்படும் விவசாய விளைபொருட்களில் தமிழகம் மரவள்ளி ,கரும்பு இரண்டாமிடத்திலும் சப்போட்டா மூன்றாமிடத்திலும் நெல் 6வது இடத்திலும் உள்ளது . பூ வகைகள் ,வாழை ,வெங்காயம் மாம்பழம் ,கொய்யா உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டு பயிர்கள் தென்காசி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. கொரானா கொண்டு வந்த ஊரடங்கு வெளிமாநில பணியாளர்களை விரட்டியடித்துவிட்டது. விளைபொருட்களை எடுக்க ஆட்கள் இல்லை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விளைபொருட்களை சந்தையில் விற்பனை செய்து விட்டு வீடு திரும்பும் உழவர்கள் மீது பல இடங்களில் யாரென்று தெரியாமல் காவல்துறையினர் தடியடியும் நடத்தி உள்ளனர் .ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரானா பரவலால் மூடப்பட்ட தொழில்நிறுவனங்கள் ,சேவைப் பணிகளால் தமிழகமே ஸ்தம்பித்துவிட்டது .

தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

கொரானா வைரஸ் விஸ்வரூபம்

எடுத்துவிடக் கூடாது என மத்திய அரசு மணிக்கு ஒருமுறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த தமிழக மக்களில் ஆண்களில் 70 சதவிதமும் பெண்களில் 20 சதவதமும் தொலைக்காட்சி செய்திகளை தொடர்ந்து பார்த்ததால் மன அழுத்தத்துக்கு ஆளானதாக மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் உணவுப்பொருட்களை வாங்க தடையை தளர்த்தி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கியதால் மீன் , இறைச்சி கடைகளில் ஞாயிற்றுகிழமை கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. தகவலறிந்த பாரதப் பிரதமர் தமிழக முதலமைச்சரிடம் வருத்தப்பட்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க அறிவுறுத்தி உள்ளார் .

சரியும் பணப்புழக்கம்

தமிழத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் விவசாயம் மூலம் வரும் 21 சதவித்தில் 70 சதவித மக்கள் நேரடி பங்களிப்பை வழங்கிவருகின்றனர். தமிழக 70 சதவித மக்களின் பொருளாதார பின்னடைவை சமாளிக்க ஒரு வருடம் பிடிக்கும் என விவசாய ஆலோசகர்கள் விளக்கமளிக்கின்றனர். பணமதிப்பிழப்பு கையாண்ட காலத்தை விட மோசமான பணத் தட்டுப்பாடு வந்து விடுமோ என்கிற அபாய சங்கொலி மக்களின் காதுகளை துளைக்க தொடங்கி விட்டது. தராசுத் தட்டில் ஒரு பக்கம் பணம் ,மறுபக்கம் உயிர் என்றால் உயிர் பக்கமே சாயா வேண்டும் என உற்றாரும் உறவினரும் வற்புறுத்துவதால் சோகத்தோடு வீட்டுக்குள் அடைக்கலப்படுகின்றனர் . தமிழக மக்கள் சில காலம் பொறுமையை கையாண்டு உயிரை காப்போம்! உயர்வை பெருவோம்!!

About Author

error: Content is protected !!