May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவ மாணவியர்

கொரொனோ நிவாரணநிதி அனுப்பிய கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவிகள்

திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் சண்முகநாதன் இவர் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி நேர்முக உதவியாளர் ஆவார் , இவரது மகள் மித்ரா தர்ஷினி கொரோனா பரவல் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்பட்ட , நிலையில் வீட்டிலிருந்து  தொலைக்காட்சியில் வரும் செய்திகளை பார்த்து வந்துள்ளார், அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொரோனா நிவாரண நிதி தர பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார் மேலும் இவரது தந்தை வாட்ஸ் அப்பில் ஒரு சிறுமி நிவாரண உதவி அனுப்பிய செய்தியை காட்டியுள்ளார் உடனே உற்சாகமான மாணவி தன்னுடைய மற்றும் தனது தங்கை சித்தப்பா மகன் ,மகளிடமும் சொல்ல நால்வரும் தாங்கள் சேர்த்து வைத்த பணத்தோடு கொஞ்சம் தாய் தந்தையிடமும் வாங்கி அனுப்ப முடிவு செய்தனர்

கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவ மாணவியர் மித்ரா தர்ஷினி ,வித்யா தர்ஷினி, ரூபேஷ் குமார்  ,திவ்யதர்ஷினி

கொரோனா நிவாரண நிதிக்கு பணம் கொடுக்க முன் வந்ததைப் பார்த்த தந்தை , மகளின் செயலை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்,உடனே நால்வரின் பணத்தை இணையதளம் மூலம் முதல்வர் பொது நிவாரண நிதி மூலமாக அனுப்பி வைத்தார்இவர்கள் நால்வரும் விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்துவருகின்றனர்
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி நேர்முக உதவியாளர் சண்முகநாதனின் மகள்கள் மித்ரா தர்ஷினி ,வித்யா தர்ஷினி மற்றும் அவரின் தம்பி மகன் ரூபேஷ் குமார் ,மகள் திவ்யதர்ஷினி, ஆவர் , இவர்கள் நால்வரும் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய செய்தியை தெரிந்து கொண்ட அவரது பள்ளி மாணவிகளும் அனுப்ப தயாராகி வருகின்றனர்

About Author

error: Content is protected !!