June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரொனோ தடுப்பு விழிப்புணர்வு பணியில் செஞ்சிலுவை சங்கம்

இந்தியா முழுவதும் கொரொனோ தொற்று பரவாமல் தடுக்க  அரசு பல முயற்சிகளையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது அரசோடு  பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இப்பணியில் தங்களை  இணைத்துகொண்டு தொண்ட்டாற்றி  வருகின்றனர் இவர்களோடு செஞ்சிலுவை சங்கமும் கை கோர்த்து உள்ளது,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிளை இந்திய செஞ்சிலுவை கிளை சங்கம் சார்பில் மாவட்ட உறுப்பினர்கள் ஜஸ்டின் ராஜ் உறுப்பினர்கள் பாபு, செல்வா, கண்ணன்,கிங்ஸ்லி ,அருணா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர்  கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடம் கொரொனோ தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் , இவர்கள் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு  நாளுக்கும்  ஒரு ஒன்றியம் என்கிற அடிப்படையில்  சுழற்சி முறையில் இந்த சமுக பணியினை செய்து வருகின்றார்

மேலும் கைகழுவும் முறை , கொரொனோ அறிகுறிகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்  மேலும் ஊரடங்கு சமயத்தில்  சமயத்தில் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு உரிய பயிற்சியும் அதற்கான விளக்கம் அளித்து வருகின்றனர்

மேலும் சாலையில் செல்வோரை நிறுத்தி எதற்காக அவர்கள் வெளியில் வருகின்றார் , வெளியில் அவர்கள் வருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் சமுக விலகல் குறித்தும்  அவர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உரிய விளக்கம் அளித்து அவர்களை அனுப்பி வைக்கின்றனர்

நம்மை காக்க பலர் வெளியில் இருக்க நாம் வீட்டில் பாதுகாப்பாக இருப்போம்

About Author

error: Content is protected !!