June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரானோ – மத்திய மாநில அரசு வேண்டுகோள்

கொரானா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்க முன்வர வேண்டும் – தமிழக அரசு.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் – தமிழக அரசு.
பொதுமக்களின் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு உண்டு.


பொது நிவாரண தொகையை முதலமைச்சரிடம் மற்றும் அரசு அலுவலர்களிடம் நேரடியாக வழங்க வேண்டாம் – தமிழக அரசு.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சத்திற்கும் மேல் உதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர் பத்திரிகைகளில் வெளியிடப்படும் – தமிழக அரசு.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

தலைமை செயலகம்,

சென்னை, 600009.

சேமிப்பு கணக்கு எண்: 117201000000070,

IFSC:IOBA0001172

என்ற கணக்கில் பணம் அளிக்கலாம்.
மேற்கண்ட இசிஎஸ் மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பெயர்,செலுத்தும் தொகை,வங்கி மற்றும் கிளை,செலுத்தப்பட்ட தேதி,நிதி அனுப்பியதற்கான எண்,தங்களது முழுமையான முகவரி,இ-மெயில் விவரம்
வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code-ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IOBAINBB001, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை
மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:-
அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,
முதலமைச்சர் பொது நிவாரண நிதி,
நிதித்துறை, தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009, தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல் முகவரி dspaycell.findpt@tn.gov.in
தற்போதைய நிலையில், நேரிடையாக முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள்/நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதிஉதவிகளை பொதுமக்கள் மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிதி உதவி செய்ய விரும்புவோர், கீழ்கண்ட கணக்கில் தொகையை செலுத்தலாம்.
Name of the Account : PM CARES
Account Number : 2121PM20202
IFSC Code : SBIN0000691
SWIFT Code : SBININBB104
Name of Bank & Branch : State Bank of India, New Delhi Main Branch
UPI ID : pmcares@sbi
பொதுமக்கள் அளிக்கும் சிறிய அளவிலான நிதியுதவியும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

About Author

error: Content is protected !!