February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரானா வார்டு , விஜயகாந்த் வேண்டுகோளை ஏற்று கல்லூரியை ஆய்வு செய்த அரசு

கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள கேப்டன் விஜயகாந்த் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார் இந்நிலையில் இன்று செங்கல்பட்டு ஆட்சியர், மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

இதுகுறித்து கேப்டன் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்
கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டாள் அழகர் கல்லூரியையும், தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்திக்கொள்ள விடுத்த வேண்டுகோளை ஏற்று,
இன்று (08/04/2020 ) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான், DRO திருமதி. பிரியாசெங்கல்பட்டு SP திரு. கண்ணன், மதுராந்தகம் DSP திரு. கந்தன், செங்கல்பட்டு RDO திரு. செல்வம், மதுராந்தகம் RDO திருமதி. லட்சுமி,
உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை ஆய்வு செய்தனர்.தற்போது கல்லூரி விடுதிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது.எனது வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!