February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரானா தடுப்பு நடவடிக்கை பலன் கிடைக்காத அதிர்ச்சியில்உலகநாடுகள் கல்வியாளர்ஜா.இராஜசேகரன்

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் உடனடி பலன் கிடைக்காததால் அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள் ! !

உலக நாடுகள் தற்காப்பு கருதி எல்லையை மூடிக்கொண்ட நிலையிலும் பன்னாட்டு விஞ்ஞானிகள் தங்களுக்குள் வலைப்பின்னலை ஏற்படுத்தி கொரானா வைரஸ்க்கு எதிரான ஆய்வில் மூழ்கியிருப்பது நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது . மனித உடலில் நுழைந்து தாக்குதலை தொடுக்கும் வைரஸை தடுக்கும் தடுப்பூசிகள் தயாரிக்க உலக சுகாதார அமைப்பு பல நாடுகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. உலகமெங்கும் தனித்தனியாகவும் கூட்டாகவும் முதற்கட்ட தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். உலகின் மிகப்பெரிய பணக்காரரும் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபருமான பில்கேட்ஸ் கொரானா வைரஸ்க்கு எதிரான மருந்துகள் தயாரிக்க 100 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கி உள்ளார். மருந்துகள் தயாரிப்பு பட்டியலில் ஏழு வகையான மருந்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் இரண்டு மருந்துகள் கண்டிப்பாக பலனளிக்கும் என தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

உலக அளவில் கொரான பாதிப்பில் வல்லரசு நாடுகள் அதிகமாக சிக்கி உள்ளதால் கொரோனா வைரஸ் நடவடிக்கைகள் தொழிலாளர்களையும் ,தொழில்நிறுவனங்களையும் , பொருட்கள் வினியோக தொடரையும் பெரிய அளவில் பாதித்துள்ளதால் பொருளாதாரம் வீழ்சியடைந்துள்ளது.

மக்கள் அலட்சியம்

கொரானா வைரஸ்க்கு எதிராக உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ள நிலையில் மக்களின் அலட்சியம் இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் தொடர்கிறது. மக்களின் அலட்சியத்தால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூட் டர்ட் அந்த நாட்டு அரசின் உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றித் திரியும் மக்களை சுட்டுக் கொல்ல காவல் துறைக்கு அதிகாரம் வழங்கி உள்ளார். உலகம் முழுக்க கொரானா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 .5 லச்சத்தை தாண்டிவிட்டது.. இதில் அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி பிரான்ஸ் , இங்கிலாந்து நாடுகள் பாதிப்பிலும் உயிரிழப்பிலும் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த 10 நாட்களில் அமெரிக்காவில் கடுமையான கொரானா பாதிப்பு உச்சத்தை எட்டும் என அமெரிக்கா கொரானா தடுப்பு குழு அறிவித்துள்ளது.

நோய் பரவிய விதம்

உலக அரங்கில் கொரானா வைரஸ் இருளில் மூழ்கி அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி , ஜெர்மனி , சீனா , பிரான்ஸ் , ஈரான் , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் விழி பிதுங்கி கண் கலங்கி தத்தளித்து நிற்கின்றன. கொரனா வைரஸ் பரவுவதற்கு கூட்டம் நிறைந்த இடங்களே சாதகமாக அமைந்துள்ளன. குறிப்பிட்ட ஒரு நபர் கொரான நோய்தொற்று பாதிப்பை அவர் அறியும் முன்னரே மற்றவர்களுக்கு பரவி விடுகிறது. அதன் காரணமாகவே மக்கள் கூட்டமாக கூடுவதை தடை செய்ய நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. நோய் பரவ இந்தியாவில் டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத்மாநாடும் , சிங்கப்பூரில் சர்வதேச தொழிலதிபர்கூட்டமும் , மலேசியாவில் மசூதி வளாக தப்லீப் மாநாடும் , இத்தாலியில் மருந்தவமனை ஆய்வு மையத்தில் கூடிய கூட்டமும் காரணமாக அமைந்துவிட்டன. ஜப்பானில் முதியோர் இல்லத்தில் கூட்டமாக அமர்ந்ததும் , பிரான்ஸின் மிகப்பெரிய தேவாலயத்தில் பிப்ரவரி 18ம் தேதி பல்வேறு நாட்டினர் கலந்துகொண்ட வழிபாட்டு கூட்டம் , சீனாவின் கடல் உணவுப்பொருள் சந்தையின் ஜன நெருக்கடியும் , ஆஸ்திரியா சொகுசு விடுதியும் , அமெரிக்கா , தென்கொரியா தேவாலய வழிபாட்டு தலங்களில் கூடிய கூட்டமே தொற்று நோய் பரவலுக்கான தளமாக அமைந்துவிட்டன.

தற்காப்பு நடவடிக்கைகள்

அங்கிகரிக்கப்பட்ட மருந்துகள் தொற்றுநோய்க்கு இதுவரை அறியப்படாததால் ஒவ்வொரு நாட்டு மக்களும் பாராம்பரிய மருத்துவ முறைகளையே தற்காப்புக்காக கடைபிடித்து வருகின்றனர் .ஊரடங்கை அமல்படுத்தி மக்களை தனிமைப்படுத்தி சமூக விலகலை கடைபிடித்தல் , ராணுவத்திடம் பொதுவிநியோகத்தை ஒப்படைத்தல் , விதியை மீறாமலிருக்க மக்களை ராணுவத்தை கட்டுப்பாட்டில் வைத்தல் , ரத்த மாதிரி பரிசோதனை மையங்களை அதிகரித்தல் , சுவாச கருவிகள் வெண்டி லேட்டர்கள் தயாரித்தல் , தற்காலிக மருத்துவமனைகளை அமைத்தல் , போக்குவரத்தை தடை செய்து நாட்டின் நுழைவுவாயில்களை மூடுதல் என ஒவ்வொரு நாடும் தற்காப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

அதிர்ச்சியில் இந்தியா

கடுமையான கொரானா பாதிப்பில் சிக்கிய உலக நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உலக சுகாதார அமைப்பின் உன்னதமான எட்டு அறிவுரைகளையும் மிகக்கவனமாக இந்தியா கடைபிடித்து வந்தாலும் கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. .தொலைக்காட்சி செய்திகளையும் வலையதள தகவல்களையும் ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் உடனுக்குடன் அறிவதால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர். தினமும் மூன்று வேளை உணவு இந்தியா முழுவதும் 85 லட்சம் மக்களுக்கு முகாம்களில் வழங்கப்பட்டு வருகிறது..தமிழகத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.. 1918 ல் விழிப்புணர்வு இல்லாத காலத்தில் உலகம் ஸ்பானிஷ் புளு தொற்று தாக்கத்தால் 5 கோடி மனித உயிர்களை இழந்தது..இன்று கல்வி அறிவும் விழிப்புணர்வும் விரிந்த காலத்தில் ஊடக தகவல்களை உன்னிப்பாக கவனிக்கும் மக்கள் அடங்கவில்லையே என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவிக்கிறது .ஊரடங்கின் 12வது நாளான இன்றுடன் தமிழகத்தின் அரசு எந்திரம் முழுபலத்துடன் தொடர்ந்து களத்தில் போராடி வந்தாலும் கொரானா தொற்று குறையாமல் இன்றுடன் 571 பேர் உறுதிசெய்யப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தற்போதுள்ள வரலாற்று சோகத்திலிருந்து மீள இந்தியாவோடு பல நாடுகள் கைகோர்த்து இன்று விளக்கேற்றி வெளிச்சம் தந்தார்கள் .

நம் வாழ்வின் கடினமான இந்த நாட்களை கடந்து இயற்கையான வாழ்க்கை பயணம் விரைவில் தொடங்க…. தொடர…. கடவுள் கண் திறக்கட்டும் !

கட்டுரையாளர் ஜா.இர் ராஜசேகரன் கல்வியாளர் சமூக ஆர்வலர் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் என பன்முகம் கொண்டவர்

About Author

error: Content is protected !!