May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரானா தடுப்பு நடவடிக்கை நம்பமுடியல !?

தமிழக அரசின் கொரானா தடுப்பு நடவடிக்கை மீதான நம்பகத்தன்மையில் கேள்விக்குறி யாக இருப்பதாக கொதிக்கிறது
பால் முகவர்கள் சங்கம்

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி

கொரோ னாவை தாக்கத்திலிருந்துக்கள் தங்களை தனிமைப்படுத்தி தற்காத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு காணொளி வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் தனது இல்லத்தை கொரானா நோய் தடுப்பிற்கு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ள அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மரியாதைக்குரிய . கமல்ஹாசன் அவர்கள் அறிவித்திருந்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்திருந்தது.

மேலும் கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு எடுத்து வரும் பல நடவடிக்கைகளை வரவேற்று பாராட்டியதோடு, உடலுழைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் முன் வைத்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இவையெல்லாம் மாநில ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுக்க தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மீது வெறுப்பு அரசியலை உமிழும் நோக்கில் கொரானா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுபவர்களின் வீடுகளில் “கொரானாவில் இருந்து எங்களையும், சென்னையையும் காக்க நாங்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்” என்கிற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை (ஸ்டிக்கர்) சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் சுவற்றில் ஒட்டியுள்ளனர். (அவருடைய வீடு தற்போது கட்சி அலுவலகமாக செயல்பட்டு வரும் சூழலில் அங்கே எவரும் குடியிருக்கவில்லை குறிப்பிடத்தக்கது)

அந்த சுவரொட்டி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் அவசர, அவசரமாக அதனை அகற்றியதோடு மாநகராட்சி சார்பில் தெரியாமல் சிறு தவறு நடந்து விட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் இந்த செயல் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வேளையில் கொரானா நோய் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது.

ஏனெனில் 60ஆண்டுகாலம் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் திரையுலக பிரபலம், அத்துடன் அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் ஒருவரது வீட்டில் தெரியாமல் தவறு நடந்து சுவரொட்டி ஒட்டப்பட்டது என்கிற மாநகராட்சி ஆணையரின் வாதம் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை.

இதுவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டில் “பழனி” எனவும், சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் “விஜயா” எனவும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பெயர் மாற்றி ஒட்டுவார்களா…? அப்படி ஒட்டி விட்டு தெரியாமல் தவறு நடந்து விட்டது என கூறி எளிதாக கடந்து சென்று விட முடியுமா…?

திரு. கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசோடு இணக்கமாகி விட்டால் தாம் செல்லாக்காசாகி விடுவோமோ என்கிற எண்ணத்தில் திட்டமிட்டு அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்நிகழ்வு நடந்துள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும் எனவும், கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த ஒரு தவறும் நிகழாவண்ணம் செயல்படுமாறும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என அறிக்ககை வெளியிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!