June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரனா எதிரொலியால் மார்ச் 31 வரை பள்ளி கல்லூரி திரை அரங்கம் மூடபடும்.

*கொரோனா எதிரொலியால் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது* .

புதுடெல்லி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியர்கள் – 58, வெளிநாட்டினர் – 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்-வுடனான சந்திப்புக்கு பின் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும். தேர்வுகள் நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

About Author

error: Content is protected !!