March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கையெடுத்து கும்பிடுறோம் ப்ளீஸ் வீட்டில் இருங்க இது நெல்லை ஸ்டைல்

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது காரணம் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக ,

இதற்காக சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவர்கள் காவலர்கள் என இவர்கள் நேரம் காலம் பாராது உணவு உண்ண நேரமில்லாமல் பணியாற்றி வருகின்றனர்

நமக்காக இவர்கள் ரோட்டில் இருக்க நாட்டுக்காக நாம் வீட்டில் இருக்கு என்ன கஷ்டம் ,இதை புரிந்து கொள்ளாமல் பொதுமக்கள் பலரும் இந்த ஊரடங்கு உத்தரவை தவறாக புரிந்து கொண்டு வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்

நாடு முழுவதும் ஆங்காங்கே காவலர்கள் நாட்டு மக்களை காக்க போராடி வருகின்றனர் இந்நிலையில் இந்த படத்தை பார்க்கும் போது மக்களின் செயல் நமக்கே சங்டமாக உள்ளது

நெல்லை மாநகர காவல்துறையின் ஒவ்வொரு அதிகாரியும், காவலர்களும் களத்தில் இறங்கி பணியாற்றுகின்றனர் மக்கள் பலரும் கொரோனா வைரசின் தீவிரத்தன்மையை உணராமல் சாலைக்கு வருவது கவலையளிக்கிறது. என்கிறார்  நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சரவணன்

காவல்துறைக்கு ஒத்துழைக்க கோருகிறோம்.  மக்களை  தேவையெனில் மட்டும் வெளியே வாருங்கள் சும்மா என்று வெளியில்  வர வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொள்ளும் உதவி ஆய்வாளர் மகேஷ்குமார்

About Author

error: Content is protected !!