May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டன் விஜயகாந்த் மீலாது நபி வாழ்த்துச்செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள மீலாது நபி வாழ்த்துச்செய்தியில்
அன்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதித்த அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மீலாது நபி திருநாளாக போற்றப்படுகிறது. உலகம் செழித்திடவும், மானுடம் தழைத்திடவும், அமைதியும், ஒற்றுமையும், நட்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படவேண்டுமென்பதே நபிகளின் அருட்போதனை. வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்திற்கு உருவாக்கிக் கொடுத்த, அண்ணலின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, அமைதி நிறைந்து, ஒற்றுமை மேலோங்கி சிறப்பான வாழ்வு வாழ்ந்திட எனது மீலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!