May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆண்டாள் அழகர் கல்லூரி

கொரோனா பாதிப்புக்கு உதவ தன் கல்லூரியை வழங்கும் கேப்டன்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர்பொதுச்செயலாளர்

ஆண்டாள் அழகர் கல்லூரி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
காஞ்சிபுரம் மாவட்டம் – ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி,
சென்னை – தேமுதிக தலைமை கழகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.தமிழக அரசுக்கு கேப்டன் விஜயகாந்த் வேண்டுகோள்

கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும் தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்

.கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களான உணவு காய்கறி, உடை, மருந்து, முககவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கும், தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அன்றாட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

கேப்டன் விஜயகாந்த்

About Author

error: Content is protected !!