May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள்
உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட
குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை எடுத்து கூறுங்கள் என மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு
ஆணைய அமர்வு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் திருநெல்வேலி
மாவட்ட சார்பாக பங்கேற்க உள்ள துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் இன்று (17.06.2019)
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
குழந்தைகள் உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றங்களைத்தடுத்து அவர்களின்
தேவைகளை நிறைவேற்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
அமைக்கப்பட்டுள்ளது. இவ் ஆணையத்தின் சார்பாக வருகிற ஜீன் 21ம் தேதி இராமநாதபுரம்
மாவட்டத்தில் அமர்வு ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இருந்து தென்தமிழகத்தின் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு
அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய
உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்
கூட்டத்தில் 18 வயதுகுட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு பராமாரிப்பு,
ஊட்டச்சத்து, வளர்ச்சி, கல்வி, மருத்துவம், உடல் மற்றும் மனநிலை சார்ந்த பிரச்சனைகள்,
குழந்தை குழந்தை தொழிளாளர்களர் குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான பாலியல்
பிரச்சனைகள் மற்றும், பிற குழந்தை உரிமை மீறல்கள் குறித்த பிரச்சனைகள், குறைகள்
மற்றும் தேவைகள் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளி குழந்தைகள், குழந்தைகள்
இல்லம் விடுதிகளை சேர்ந்த குழந்தைகள், பெற்றோர் பாதுகாவலர்கள் ,பொது மக்கள், மற்றம்
தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வர்கள் ஆகியோர் குழந்தை தொடர்பான தீர்க்க முடியாத
பிரச்சனைகளை குறித்து மனுக்கள் அளிக்கலாம். இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு தீர்வுகள் ஆணைகள் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட உள்ளது.
ஆகையால் குழந்தைகள் உரிமைகள் மீறுதல் தொடர்பான மனுக்களை திருநெல்வேலி
மாவட்ட குழந்தைகள் அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, SV காம்பளக்ஸ்,
N.G.O.P.காலனி, திருநெல்வேலி 7 என்ற அலுவலகத்தில் வருகிற 19.06.2019 மாலை 5
மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபாலிலோ அளிக்க தொpவிக்கப்படுகிறது மேலும்
விவரங்களுக்கு 0462 2352953,2551953 என்ற அலுவலக எண்களை தொடார்பு கொண்டு
தெரிவித்து பயன் பெறலாம். மேலும் கூட்டத்தில் நேரடியாகவும் பங்கேற்று
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை எடுத்து கூறலாம். என
மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,தெரிவித்தார்
இக்கூட்டத்தில் திருநெல்வேலி கோட்டாச்சியர் திரு.மணிஷ் நாராணவரே இ,ஆ.ப., செய்தி
மக்கள் தொடர்பு அலுவலர் திரு.செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!