June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குழந்தைகள் தின நாளில் ஒரு குடும்பத்தை மரணத்திலிருந்து காப்பற்றிய காவலர்கள்

குழந்தைகள் தின கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டிய குழந்தைகளின் நிலை…திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேல கருவூலத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் வயது 35 இவரது மனைவி மாரியம்மாள் வயது 28 இவர்களுக்கு இசக்கிராஜா வயது 7 சூரியபிரகாஷ் வயது 5 தனலட்சுமி வயது எட்டு ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர் அருள்தாஸ் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ரூ 50000 தனது வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கடன் வாங்கினாராம் இதுவரை அவர் ரூ 2 லட்சம் வரை வட்டி கொடுத்துள்ளாராம் மேலும் ஒரு லட்சம் கேட்டு அந்த நபர் அருள்தாஸ் வீடு புகுந்து தாக்கிய மேலும் கொலை மிரட்டல் விடுத்தார்
இதனால் மனமுடைந்த அருள்தாஸ் இன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிக்க முயற்சி செய்தபோது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர் அப்படியிருந்தும் சுதாரித்துக்கொண்டு அவர்கள் தடுத்ததால் மிகப்பெரிய உயிர்பலி சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் மேலும் காவலர்கள் மிகுந்த கவனத்தோடு சோதனை செய்து உள்ளே அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் எழுந்துள்ளது
சமூக அக்கறையோடு தனது பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை மனதார வாழ்த்துவோம்

About Author

You may have missed

error: Content is protected !!