June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குல தெய்வ வழிபாடு என்பதே மிகச் சிறப்பு

நமது ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன் அவர்களுக்கு இருக்கும் இடையுறாத பணிகளுக்கு இடையில் அன்பர்களின் கேள்விகள் , தனது ஆன்மிக அனுபவம் ,ஆன்மிக குறிப்புகள் என தந்து கொண்டே இருக்கிறார்கள் பலரும் எனது கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என கேட்டுகொண்டே இருக்கிறார்கள் பொறுமை மிக அவசியம் , பொறுமையோடு காத்திருந்தால் எதையும் சாதிக்கலாம் இந்தப் பதிவும் அப்படிதான் சற்றே பெரிய அனுபவப் பதிவு பொறுமையோடு வாசிக்கத் தொடங்குங்கள் ஆன்மிக பயணத்தில்திளையுங்கள்

இராமதேவர் சித்தர் சுவாமிகள் போற்றி குருவே சரணம் சித்தர்கள் திருவடி சரணம் போற்றி சிவன் சேவடி போற்றி.அழகர்மலை மேலேயிருக்கும் இராமதேவர் குருபூஜை விழா நேற்று கலந்து கொண்டோம்.
பூரம் நட்சத்திரம் இராமதேவர் குருபூஜை.அடியேனுக்கு ஜென்ம நட்சத்திர தாரை வரிசையில் வருகிறது பூரம்.இராமதேவர் தான் யாக்கோபு.யாக்கோபுதான் மோத்தி பாபா போகநாதர் உத்தரவின் பேரில் பழனியிலிருந்து மதுரைக்கு பயணப்பட்டோம்.இராமதேவர் குருபூஜைக்கு செல்ல வேண்டும் என்பதே சித்தர்களின் உத்தரவு.ததாஸ்து=அப்படியே ஆகட்டும்=இராமதேவர்.

கரடுமுரடான காட்டுப் பாதையில் நூபுர கங்கை இராக்காயி அம்மன் கோயில் மேலே அடர்ந்த காட்டு பகுதிக்கு மேலை மலை முகட்டில் இராமதேவர் சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.இராமதேவர் சித்தர் அழைத்திருந்தார்.குருவின் தேடல் இவனின் ஜீவன் குருவின் உத்தரவு இவனின் பலம்.மோத்தி பாபா தர்ஹா அடிக்கடி சென்றதுண்டு.அதன் தொடர்ச்சியாக ஸ்தூலத்தை வந்து பாருடா என்று இராமதேவர் சித்தர் சுவாமிகள் ஜீவசமாதிக்கு அழைத்திருந்தார்.18=1+8=9=முருகன்=செவ்வாய் பகவான் நவநாயகர்கள்.

சித்தர்களுக்கெல்லாம் ஆதிசித்தன் முருகப்பெருமான் அச்சித்தனை தன் நெற்றிக்கண்ணிலிருந்து உருவாக்கியவன் சிவபெருமான் அவன் ஆதியின் மூலம் ஆதிமூலம்.இராமதேவர் குருபூஜைக்கு செல்ல குருநாதர் உத்தரவு பிறப்பித்து அழைத்திருந்தார்.பழனியிலிருந்து மதுரைக்கு சென்றவுடன் அழைத்துச் செல்வதற்கு ஆள் தயாராக குருநாதர் ஏற்பாடு செய்திருந்தார்.

எங்களை ஒரு நல்ல இடத்தில் தங்க வைத்தார்.அங்கே சித்தர்கள் உணர்த்திய பல அற்புத சித்து விளையாட்டுகள் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.காலையில் குருநாதர் காட்டிய அன்பர்களின் உதவியுடன் அழகர்மலை மேலுள்ள இராக்காயி கோயில் வரைக்கும் செல்ல கார் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் குருநாதர்.அங்கிருந்த மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தோராயமாக நடக்க வேண்டும்.சதுரகிரியை விடவும் பாதை மிகவும் கடினமானதாக இருந்தது.

சில இடங்களில் உயரத்தில் நடக்கும் பொழுது குடல் வெளியே வந்து விடும் போலிருந்தது.இராமதேவர் துணையுடன் கீழிருந்து மேலே சென்றோம்.கூடவே சூட்சும ரூபத்தில் பின்தொடர்ந்து பத்திரமாக மேலே அழைத்து சென்றார்.வாகனத்தில் செல்லும் வழியெல்லாம் ஆஞ்சநேயர் சுவாமி வந்து நாங்கள் கொடுத்த வடைகள் பிஸ்கெட்டுகள் ஆரஞ்சு மிட்டாய்கள் என்று வண்டியின் பின்னே ஓடி வந்து வாங்கிக் கொண்டார்கள்.மாதம் ஒரு மலை ஏறினால் உங்கள் உடம்பின் தன்மையை நீங்களே அறிந்து கொள்ளலாம்.செருப்பு போட்டு நடந்து சென்றவன் ஒரு கட்டத்திற்கு மேல் செருப்பை கழற்றி வைத்து நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மலையில் நம் முன்னோர்கள் குரங்குகள் ஏறுவது போல நான்கு கால்களில் பயணித்தோம்.நிறைய இடங்களில் உட்கார்ந்து உட்கார்ந்து நடந்தும் தவழ்ந்தும் பயணப்பட்டோம்.சரளை கற்கள் கால்களில் குத்தின பாறாங்கற்களில் கால் வைத்தால் நெருப்பாக கொதித்தது.

ஓம் நமசிவாய பஞ்சாட்சரம் மந்திரம் உச்சாடனம் செய்து கொண்டு ஏறினோம்.ஓம் இராமதேவர் சித்தர் சுவாமிகள் போற்றி என்று மந்திரம் உச்சாடனம் செய்யுங்கள் எல்லா கஷ்டங்களும் தீர்ந்து விடும்.கீழிருந்து மேலே செல்லும் வழியில் தண்ணீர் கிடைக்காது என்பதால் தண்ணீர் பாட்டில்களுடன் சென்றோம்.ஒரு கட்டத்தில் செங்குத்தான நேர் பாறைகளில் நடக்கும் பொழுது ஈரக்குலை நடுங்கியது.Dina Karan மட்டுமே உற்ற துணையாக வந்தான் உடனே.அவன் எனக்கு சாதக தாரை நட்சத்திரக்காரர்.அவனுக்கு நான் பிரத்யக்ஞை தாரை நட்சத்திரம்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு அவனிடம் என் கூட வந்தால் உனக்கு நிறைய கஷ்டங்கள் வேதனைகள் பாரங்களை மட்டுமே தாங்க வேண்டியது வரும் என்று அவன் ஒரு வார்த்தைதான் சொல்லுவான் நீங்கள் கூட இருக்கும் பொழுது எந்த தடையையும் குருநாதர் அருளால் இருவரும் உடைத்து விடலாம் இதில் விபத்து தாரையாக வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி விடுவான்.நானும் குருநாதர் பார்த்துக் கொள்வார் என்று அவரின் மேல் பாரத்தை போட்டுட்டு அவர் உத்தரவு நல்கிய இடங்களுக்கு செல்வதுண்டு.குருநாதர் ஓர் இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்றால் நிறைய விஷயங்களை நமக்கு தெளிவுபடுத்துகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.குரு பார்க்க கோடி நன்மை.

குரு நேரடியாகவே எங்களை பார்த்துள்ளார்.இராமதேவர் தரிசனம் வேண்டி ஒரு நபர் தினமும் கீழிருந்து மேலே மலைக்கு செல்வதாக கேள்விப்பட்டேன்.அவரிடம் எப்படி தனியாக செல்கிறீர்கள் என்று கேட்டவர்களிடம் நான் எங்கே தனியாக செல்கிறேன் பகவான் இராமதேவர் என்னுடனே கீழிருந்து மேலே பயணிக்கிறார் என்பாராம்.ஏனெனில் அந்த அடர்ந்த காட்டில் எங்களுடன் நடந்தவர்களே வனவிலங்குகளை குறிப்பாக காட்டெருமைகளை கருநாகங்களை சந்தித்ததாக சொல்லக் கேட்டேன்.

இராமதேவர் நம்மை எதற்காக அழைத்துள்ளார் அதுவும் அவருடைய குருபூஜை அன்று என்ற யோசனை இருந்து கொண்டேயிருந்தது ஏனெனில் அவருக்கு தெரியும் இவனால் மலைகள் ஏற முடியாது என்று இருப்பினும் அழைப்பு விடுத்திருந்தார் இதில் ஏதோ சூட்சுமங்கள் உள்ளது என்று மட்டும் குருவின் ஆணையை ஏற்று புறப்பட்டேன்.கீழிருந்து செல்லும் பொழுதே வழியில் எங்கும் தண்ணீர் கிடைக்காது கையில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டும் தண்ணீர் 1,2,5 லிட்டர் கேன்களில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.எங்களுடன் வந்தவர்கள் சமதளபாதையில் விறுவிறுவென்று மேலே நடந்தார்கள் எனக்கு சாதக தாரை நட்சத்திரக்காரன் தினகரன் மற்றுமே கடைசி வரை துணையாக இருந்து என்னை மலையேற்றி அடிவாரம் கொண்டு வந்து சேர்க்கும் வரை அனைத்து அவஸ்த்தைகளையும் என்னை உட்பட பொறுமையாக அழைத்து வந்தான்.

சொல்லப் போனால் சிறுவயதில் நாம் விளையாடிய உப்பு மூட்டைப் போலவே நிறைய இடங்களில் அவன் முதுகில் நான் ஏறிக் கொண்டது போலவே சாய்ந்து கொண்டேன் என் ஒட்டுமொத்த எடையும் அவன் தாங்கிக் கொண்டான்.நிறைய இடங்களில் ஓம் நமசிவாய பஞ்சாட்சரம் மந்திரம் ஓம் சித்தர்கள் திருவடி சரணம் போற்றி ஓம் ஜெய் ஸ்ரீராம் என்று உச்சாடனம் செய்து கொண்டே நடந்தோம்.

நம்மை விட வயதானவர்களும் சிறியவர்களும் கூட பெண்கள் ஆண்கள் நடந்தார்கள் அதை பார்க்க பார்க்க நமக்கே தெம்பு வருகின்றது.ஒரு பெரியவர் யாருடைய உதவியும் இல்லாமல் இரண்டு குச்சிகளை ஊன்றி நடந்தார் அதுவும் வேக வேகமாக.கொஞ்ச தூரம் வரை செருப்பு போட்டு நடந்தேன் அதன் பிறகு பாறைகளில் வழுக்கும் என்பதால் செருப்பை கழற்றி விட்டு நடந்தேன்.

எல்லோருக்கும் இருக்கும் கேள்வியை போல இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது என்று இறங்கி வரும் பக்தர்களை கேட்டுக் கொண்டே ஏறினோம்.நிறைய பேர் நம்மை ஊக்கப்படுத்த பக்கம் தான் கொஞ்ச தூரம் பாதிதூரம் வந்துட்டீங்க இன்னும் 5 நிமிஷம்தான் அவ்வளவு தான் வந்துடுச்சு முக்கால்வாசி தூரம் நடந்துட்டீங்க என்று சொன்னார்கள் ஒரு நபர் மட்டுமே இன்னொரு danger zone உள்ளது அதை தாண்டி விட்டால் அதற்கு பிறகு நடப்பது சுலபம் என்று வேறு சொல்லி விட்டார்.நமக்கு அங்கே வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்து விட்டது.உண்மையிலேயே அது அவர் சொல்லியபடியே danger zone தான் கொஞ்சம் தப்பினால் கூட அதளபாதாளத்தில் விழ வேண்டியதுதான் கரணம் தப்பினால் மரணம் என்பதை போல ஒரு இடத்தில் மலைகளில் மட்டுமே பெரிய பெரிய பாறைகள் மத்தியில் எந்த பிடிப்பும் இல்லாமல் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

கீழே பார்த்தாலும் மேலே பார்த்தாலும் அக்கம் பக்கம் பார்த்தாலும் தலையே சுற்றியது.இராமதேவர் மட்டுமே மலை ஏற்றத்தை சாத்தியபடுத்தினார்.நிறைய பேர் அந்த இடத்தில் கை கொடுத்து தூக்கினார்கள்.வயதான பாட்டி ஒருவர் ஓம் நமசிவாய பஞ்சாட்சரம் மந்திரம் உச்சாடனம் செய்து கொண்டே இறங்கி வந்தார் கழுத்து முழுவதும் ருத்திராட்சம் அணிந்திருந்தார்.

அந்த அம்மாவை பார்க்கும் பொழுது பராசக்தி மாரியம்மன் நடந்து வந்தது போலவே மஞ்சள் கலர் புடவையில் கண்களில் அபரிதமான சக்தி தெரிந்தது.ஆங்காங்கே சங்கு நாதங்கள் முழங்கிக் கொண்டே சென்றார்கள்.நிறைய தாடி வைத்திருந்த சாமியார்கள் வந்திருந்தார்கள் குருநாதர் இங்கிருந்து கிளம்பும் முன்பு சொல்லி அனுப்பியிருந்தார் யார் காலிலும் விழாதே என்று அது போலவே யார் காலிலும் விழவில்லை.நிறைய இடங்களில் தவழ்ந்து சென்றேன் உட்கார்ந்து சென்றேன் படுத்து உருண்டும் சென்றேன் பார்த்து விட வேண்டும் என்பது மட்டுமே ஓரே குறிக்கோள் அந்த நேரத்தில் வேறு எந்த எண்ணமும் இதை தவிர மனதில் தோன்றவில்லை.

சில இடங்களில் பாதைகள் வேறு மாறி மாறி வந்தது நல்லவேளையாக அம்புக்குறி போட்டு போகும் வழியை சரியாக பின்பற்ற பக்தர்களுக்காக வரைந்திருந்தார்கள் அதனால் திசை மாற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.மலையின் உச்சியை அடைந்தவுடன் இரண்டு பெரிய மலைகளுக்கு நடுவே இராமதேவர் ஐயா நந்தியம்பெருமான் கணபதி சுவாமிகள் உடன் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

அப்படியே ஆகட்டும் என்று எழுதியிருந்த வாசகம் கீழேயே கிடைத்த கடவுள் குறிப்பு அது மேலேயும் எழுதியிருந்தது.மலை குன்றுகளுக்கு நடுவே ஐயாவை பார்த்தது அந்த மலையே அவர் போல தெரிந்தார்.வரும் வழியில் சில நபர்கள் பேசிக் கொண்டே வந்தார்கள் இனிமேல் மலை ஏற அனுமதியில்லை என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டார்களாம்.குரங்கணி மாதிரியான சம்பவங்கள் நடந்ததால் பக்தியுடன் சாமி கும்பிட போகும் உண்மையான பக்தர்களுக்கு இப்படியும் சோதனைகள் வருவதுண்டு.

மேலும் மலையில் ஏறி சில வேண்டதகாத விஷயங்களை தூய்மையற்ற நபர்கள் செய்து விடுவதால் பக்தர்களுக்கு நிறைய தடைகள் வருகின்றது.இராமதேவர் ஐயாவை தரிசித்து கீழே விழுந்து வணங்கி விபூதி பூசிக் கொண்டோம் பிரசாதமாக அவல்பொரிகடலை ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்கள்.சங்கு நாதங்கள் முழங்கிக் கொண்டே இருந்தது.சென்னையில் இருந்து வந்திருப்பதாக பூஜை செய்பவரிடம் எங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

வில்வமும் ரோஜாப்பூவும் பூசாரி கொடுத்தார்.விபூதியை பட்டை அடித்துக் கொண்டோம் சின்ன இடம் என்பதால் மற்றவர்களும் தரிசிக்க வேண்டும் என்று இறங்கி ஐயாவின் நேர் எதிரே உள்ள பாறையில் சாய்ந்துக் கொண்டே அவரை உருவ கண்களால் நோக்கினேன்.இராமதேவர் ஐயா சூட்சுமமாக தரிசனம் கொடுத்தார்.அற்புதமாக இருந்தது.யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
இந்த புகைப்படத்தை நன்கு உற்று நோக்குங்கள்.

ஐயாவின் காட்சி அங்கங்கள் உருவ அமைப்பு தெள்ளத் தெளிவாக தெரியும்.இதை புகைப்படம் எடுத்தது தினகரன் தான் உணர்ந்ததும் தினகரன்தான் சென்னை வந்த பிறகே அதை அவன் உணர்ந்ததை எனக்கு தெரிவித்தான்.நான் அங்கேயே உணர்ந்தேன்.மதுரையிலேயே அவன் புகைப்படத்தில் பார்த்ததை சொல்லுவதற்குள் தூங்கி விட்டேன் யான்.கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கும் கடவுள் மறுப்பு செய்பவர்களுக்கும் இந்த புகைப்படத்தை காட்டினாலும் புரிந்தாலும் புரியாதது போல நடிப்பார்கள்.உங்களுக்கு இந்த புகைப்படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது என்று கீழே பின்னூட்டத்தில் பதில் அளிக்கவும்.முந்தைய நாள் கிருபா சங்கர் பழனி முருகன் கோயிலில் செருப்பு தொலைத்து விட்டு வருந்திக் கொண்டிருந்தார் அவருக்கு செருப்பு தொலைத்தல் கர்மத்தை தொலைப்பதற்கு சமமாகும் உங்களுக்கு நல் காலம் பொறக்குது புதிய மாற்றங்கள் நிகழும் என்று அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி விட்டு இந்த நிமித்தத்தை நாம் சந்திப்போம் என்று தினகரனுக்கு உரைத்தேன் அதே போல அழகர் மலை மேலே இராமதேவர் ஐயாவை தரிசித்து விட்டு கீழே இறங்கும் பொழுது செருப்பை விட்டு விடும் சூழ்நிலை எனக்கும் நடந்தது.

நிறைய இடத்தில் தினகரன் செருப்பை ஞாபகபடுத்திக் கொண்டே வந்தான் நான் சிவனை மட்டும் மனதில் நினை செருப்பை நினைக்காதே என்றேன் ஒரு கட்டத்தில் செருப்பை பற்றிய விஷயத்தை அவனும் மறந்தான்.செருப்பு தொலைத்தல் கர்மத்தை தொலைப்பதற்கு சமமாகும் செருப்பு=சனிபகவான் கர்மம்=சனிபகவான் கர்மம்=வேலை சனிபகவான்=வேலை தொழில் அந்த பழைய செருப்பு தொலைவது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று அர்த்தமாகும் அதுவாகவே தொலைந்தால் 100 சதவிகிதம் பலன்கள் கிடைக்கும் நாமாக தொலைத்தாலும் அதில் பாதி சதவிகிதம் கிடைக்கும் ஆனால் செருப்பு தொலைத்து விட்டதே என்று வருத்தம் துளியும் இருக்க கூடாது ஒரு நல்ல திருப்புமுனை ஏற்படும் என்று நம்பிக்கை இருக்க வேண்டும் இராமதேவருக்கும் பட்டினத்தாருக்கும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் அடிவாரத்தில் நடத்தி இருந்தார்கள் மேலே இராமதேவர் குருபூஜை கீழே கும்பாபிஷேகம் ஸ்தூலம் சூட்சுமம் இரண்டும் உணர்ந்து தெளிந்து கவனித்து பார்த்து சித்தர்கள் திருவடி சரணம் அடைந்தோம்.இராமதேவர் ஐயாவை தரிசனம் செய்தது பெரும்பாக்கியம்.குருநாதர் சொன்ன வார்த்தைகளை மட்டுமே பின்பற்றினேன் சித்தர் சுவாமிகள் தரிசனம் பெற்றேன்.

எனக்கு கிடைத்த பேரானந்தத்தை பதிவிடுவதே நீங்கள் தேடி கண்டடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.அதற்கே நம்மை வழிநடத்துகிறார்கள் சித்தர்பெருமக்கள்.அடிவாரத்தில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற நிகழ்வை தனியாக பணிவிட உத்தரவு.இந்த பதிவினை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள் சேர்த்து விடுங்கள்.முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக இந்த முடவன் மலை ஏற ஆசைப்பட்டான் சித்தர்கள் மலை ஏற்றினார்கள் மலையிலிருந்து கீழே இறக்கி விட்டார்கள்.

இல்லையென்றால் பழனி மலையும் இராமதேவர் மலையும் இவன் ஏறினான் என்று சொல்ல முடியாது.இவர்கள் ஏற்றி விட்டார்கள் தூக்கி விட்டார்கள்.மதுரையில் அழகர் கோயில் மேலே இராக்காயி அம்மன் கோயில் நூபுர கங்கை உள்ளது அதற்கு மேலே சுமார் 7 கிலோ மீட்டர் தோராயமாக நடக்க வேண்டும் மலைபாதை காட்டுவழி பாதை மாதம்தோறும் பவுர்ணமிக்கும் அமாவாசை அன்றும் நடப்பதாகவும் சிலர் கூட்டமாக செல்வதாக கூறினார்கள் காலையில் மட்டுமே நடப்பது நல்லது வெயிலில் நடப்பது கொஞ்சம் சிரமம்தான் அதே போல மாலைக்குள் திரும்பி விடுவது நன்று இரவு யாரும் நடக்க மாட்டார்கள் அடர்ந்த காடு தனியாக நடக்க கூடாது வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் தாரை தப்பட்டை சங்கு நாதங்கள் முழங்கிக் கொண்டே நடக்கிறார்கள்.

தொழிலில் புதிய மாற்றம் நிகழ செருப்பு தொலைத்தல் நல்ல பரிகாரமாகும்.கோவிலில் ஜீவசமாதிகளில் செருப்பு தானாகவே தொலைந்தால் ரொம்ப நல்லது.நிறைய பேர் கேட்பதுண்டு தேடிக் கொண்டேயிருக்கிறீர்களே என்று நான் எனக்காக மட்டுமே தேடி செல்வதில்லை என்னை பயணிக்க வைப்பதே என் அனுபவங்கள் மூலமாக நிறைய பேர் அந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே சித்தர்களின் உத்தரவு.நான் அதை உலகளாவிய முறையில் செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் சித்தர்கள் இராஜ்ஜியம் அமைப்பதற்கே நாங்கள் சித்தர்களால் நியமிக்கப்பட்டுள்ள சிறு துரும்பு.சுயநலமற்றவர்கள் மட்டும் இணையவும்.

உங்களை நீங்களே காண்பீர்கள்.உங்களுக்குள் இருக்கும் ஆன்மாவை தெரிந்து கொள்ள முடியும் இந்த பயண அனுபவத்தில் பழனியிலிருந்து வரும் பொழுது தினகரன் அரை மணி நேரமாக கண்ணீர் விட்டு அழுதான் ஆனந்த கண்ணீர்.அவனுக்கு நிறைய விஷயங்களை தெளிவுபடுத்தினார் குருநாதர் இந்த சிறுவயதில் அவனை தேர்ந்தெடுத்துள்ளதே அவன் பூர்வஜென்ம புண்ணியம்.உங்களுக்கு சோதனைகள் அதிகம் சந்திக்கின்றீர்கள் என்றால் சித்தர் மார்க்கத்திற்கு வந்து விடுங்கள் இது கொஞ்சம் பக்தி மார்க்கத்திலிருந்து ரொம்ப வித்தியாசமானது.

எல்லாவிதமான நல்ல செய்திகள் சம்பவங்கள் அனுபவங்கள் சோதனைகள் கிடைக்கும்.சொல்ல போனால் நிறைய பேர் என்னை ஏதோ லட்சாதிபதியாகவும் ஊர் சுற்றுபவனாகவும் சித்தர்களை தரிசிக்க கொடுத்து வைத்தவனாகவும் பணம் அதிகம் உள்ளவனாகவும் நினைத்து என்னிடமே அந்த கேள்வியாக உங்களுக்கு என்னங்க கொடுத்து வைச்சவரு நினைச்சா கிளம்புறீங்க எங்களால அப்படி முடியலை உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது உங்களுக்கு மட்டும் எப்படி இபாபடியெல்லாம் அற்புதங்கள் நடக்கிறது என்று கேட்கிறார்கள்.

அதற்கு பின்பு உள்ள தியாகங்களும் கஷ்டங்களும் யான் ஒருவன் மட்டுமே அறிவேன்.இதற்குள் காசு பணம் கார் பங்களா ஆடை ஆபரணங்கள் தேடி யாரும் வர வேண்டாம் அதே போல சித்தர்கள் ஜீவசமாதி செல்பவர்கள் எதையும் எதிர்பார்த்து செல்ல வேண்டாம் அவர்கள் இந்த மாயையை விடுத்து எல்லாவற்றையும் கடந்து துறந்து வேறு ஒரு தளத்தில் இருக்கிறார்கள் சிற்றின்பத்திற்காக சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு தேடல் பயணம் குற்றமாகும் நடக்கவும் நடக்காது இறைவனை அடைய குருவை பிடித்துக் கொள்ளும் வழியே சித்தர்கள் மார்க்கம்.எனக்கு நிறைய மிரட்டல்கள் உண்டு இங்கு நிறைய அரசியல் உண்டு என்னையே தவறாக சித்தரிப்பவர்கள் உண்டு நானே பல நேரங்களில் தூக்கி எறிந்து பேசுவதுண்டு அது அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் சிவார்ப்பணம் முருகார்ப்பணம்.ஒரு பலாப்பழத்தை போன்ற முட்கள் நிறைந்த மனிதன் இவன்.

உடன் பயணித்தவர்கள் கூட பல நேரங்களில் புரிந்து கொள்வதில்லை.நிறைய தொந்தரவுகள்தான் எனக்கு வருகின்றது உண்மையை சொல்வதென்றால் நீங்கள் நினைப்பது போல இந்த பக்கம் வருவதற்கு நிறைய விஷயங்களை நீங்கள் இழக்க வேண்டும் அதெல்லாம் உங்களுக்கான சோதனைகள் தான் பாதி பேர் கால்கிணறு தாண்டுவதற்குள் திரும்பி சென்று விடுகிறார்கள்.உங்களால் முடிந்தால் இந்த சித்தர்கள் பயணத்திற்கு செல்ல முடியவில்லை என்றாலும் அதை மேற்கொள்பவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் பணம் காசு மட்டுமே உதவியல்ல அதையும் தாண்டிய உதவிகள் நிறைய உள்ளது அதை விடுத்து அவர்களை தொந்தரவு செய்து விடாதீர்கள் அவர்களின் கோபம் வருத்தம் கூட உங்களுக்கு சாபமாகவும் கஷ்டமாகவும் மாறி விடும்.

என் எண்ணை பதிவிடுவது நீங்கள் உங்களின் சந்தேகங்களை கேட்பதற்கு என்றே நினைக்கிறீர்கள் வழி கேட்பதற்காக பதிவிடுவதில்லை எண் அதற்கு வேறு அர்த்தமுள்ளது.தினகரனை தேர்ந்தெடுக்க ஒரு வருடம் கவனித்து வந்தார்கள் ஆனாலும் இன்னும் முழுமையாக அவனுக்கு இந்த விஷயங்கள் புலப்படவில்லை இப்பொழுதும் செல்பி போட்டு கொள்வதும் நக்கல் பேச்சுக்களும்தான் அடிக்கடி அவனுக்குள் வந்து விடுகிறது அப்பொழுதெல்லாம் இந்த ரௌத்திரன் ருத்ரதாண்டவம் ஆடும்படி கட்டளையிடுகிறார்கள் நிறைய வாங்கிக் கொண்டே இருக்கின்றான் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அன்னதானத்திற்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு தேடல் பயணம் தரிசனம் மேற்கொள்பவர்களுக்கு நீங்கள் தண்ணீர் வாங்கி கொடுத்தாலே உங்களுக்கு நல்ல செய்திகள் சம்பவங்கள் நடக்கும்.அதை விடுத்து அவர்களை தொந்தரவு செய்வது எள்ளி நகையாடுவது நக்கல் நைய்யாண்டி பேச்சுக்கள் கிண்டல் செய்வது சித்தர்களின் பிள்ளைகளை நீங்கள் அவமதிப்பு செய்வதற்கான பலன்களை வாங்கி கொள்கின்றீர்கள் என்று அர்த்தம் இதனால் தான் வாழும் சித்தர்கள் யார் கண்ணிலும் படாமல் வெளி வேஷத்திற்கு தங்களை ஒரு பித்தனாகவும் பிச்சைக்காரனாகவும் காட்சிபடுத்திக் கொள்கிறார்கள் மக்கள் அப்படிபட்டவர்களை கண் எடுத்து பார்க்க மாட்டார்கள் அல்லவா அதற்கு பின்புறம் நிறைய சூட்சுமங்கள் ஒளிந்துள்ளதாகும்.சித்தர்கள் தேடலில் இருப்பவர்களில் பலர் சுயநலமிக்கவர்கள்தான் அவர்களுக்கும் தகுந்த நேரத்தில் சரியான தண்டனை குருமார்கள் உணர்த்தி வழங்குவதுண்டு.

தங்களுக்கு கிடைத்த விஷயங்களை எத்தனை பேர் இன்று மக்களுக்கு உரைக்கிறார்கள் இதை புத்தகமாக போட்டாலே பல காசு சம்பாதித்து விடலாம் ஒரு சிலரே பொதுமக்களுக்காக பயன்படுத்தும் விதமாக உன்னதமாக தொண்டு செய்வதுண்டு குருநாதர் என்னை தேடி வந்ததே இப்படி இறைவனுக்கு தொண்டு செய்யும் உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் என்று உரைத்தார் நீ சரியான பாதையில் செல்கிறாய் மகனே உனக்கு அனைத்தும் சித்தியாகும் என்றார் நீ ரௌத்திரனாக இருப்பதுதான் உனக்கும் நல்லது உன் பயணத்திற்க்கும் நல்லது என்பார் குருநாதர்.எல்லோருக்கும் இந்த பயணம் நடைபெற வேண்டும் என்று எண்ணியது தான் சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு தேடல் பயணம் ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தொந்தரவிற்குட்பட்டு கைவிட்டு விட்டோம்.சித்தர்களும் இனி தனியாகவே பயணப்படு நாங்கள் சொல்லும் வரை என்று உத்தரவு பிறப்பித்து விட்டார்கள் கொஞ்சம் காலம் கடந்து மீண்டும் செய்வாய் உணர்ந்தவர்களை மட்டும் ஒருத்தனாவது அழைத்து செல் அதுவரை உன்னுடன் நாங்கள் இருப்போம் என்று கூறி விட்டார் ஆதலால் குருநாதர் உரைத்தது மட்டுமே இந்த வழிப்போக்கனுக்கு நற்கதி நற்பவி.

ஓம் நமசிவாய ஓம் சாய்ராம் ஓம் சற்குருவே சரணம் சித்தர்கள் திருவடி சரணம்#பிரேம்சந்த் நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி 9789168398 குலதெய்வம் வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பு ஓம் பூர்ண புஷ்கலை சமேத பரியேறும் பெருமாள் சாஸ்தா ஐயப்பன் துணை.ஓம் அகத்தீசாய நமக திருச்செந்தூர் முருகன் போற்றி ஓம் 18 சித்தர்கள் திருவடி சரணம் போற்றி ஓம் கணக்கம்பட்டியார் சுவாமிகள் போற்றி ஓம் நமோ நாராயணாய நமக.

ஜோதிடர் முகவரி

About Author

error: Content is protected !!