May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றால சீசன் தாமதம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குற்றாலத்தின் பருவகாலம் காலதாமதமாவாதல் வெறிச்சோடி காணப்படும் குற்றாலம் அருவிப்பகுதிகள். சுற்றுலா பயணிகளின்வரத்து இல்லாததால் வணிகர்கள் ஏமாற்றம்.நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் குற்றாலத்தின் பருவ காலங்கள் ஆகும். வருடா வருடம் மே மாத இறுதியிலேயே குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்யத் தொடங்கும். ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி 8 தினங்கள் ஆன நிலையில் இன்று வரை இப்பகுதியில் சாரல் மழை கூட பெய்ய துவங்கவில்லை. கடந்த ஆண்டு இதே சமயத்தில் சீசன் தொடங்கி குற்றாலம் களைகட்டியது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து சென்ற குற்றாலத்தில், தற்போது பருவ மழை இல்லாததால் குற்றாலம் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. அருவிகளில் நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி இந்த பகுதியில் உள்ள வணிகர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
ஓரிரு கடைகள் தவிர மீதம் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிக்கரைகளில் உள்ள வணிகர்கள் குற்றால பருவ காலத்தை நம்பியே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடை நடத்தி வருகின்றனர். தற்போது மழை இல்லாத இதே நிலை நீடித்தால் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ இணைப்பை காண  https://bit.ly/2XxQmqT

About Author

error: Content is protected !!