February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றால அருவியில்12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் தற்போது ஐயப்பபக்தர்கள் சீசன் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மிதமாக சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக உள்ளது.
பள்ளி விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஐயப்பக்தர்கள் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று பெண்கள் பகுதியில் உள்ள தடாகத்தில் இருந்து 12 அடி நீளமும், 40 கிலோ எடை உடைய பெண் மலை பாம்பு கரையில் ஏறியது.இதனை கண்ட பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த குற்றாலம் வனத்துறையினர் சிறிது நேரம் பாம்பை தேடி விட்டு பாம்பு கிடைக்காததால் சென்று விட்டர். பின்னர் குற்றாலம் காவல்துறையினர்செங்கோட்டை தீயனைப்புத்துறையினருக்கும் வன ஆர்வலர்சேக் உசேனுக்கும் தகவல் கொடுத்தனர்
அதனை தொடர்ந்து அங்கு வந்த செங்கோட்டை தீயனைப்புத்துறையினர் மற்றும் சேக் உசேன் சேர்ந்து அருவி மற்றும் தாடாக பகுதிகளில் தேடினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பு பிடிப்பட்டது. அதனை அரசு காப்பு காடுகளில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

About Author

error: Content is protected !!