February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி ஆண்டாள் திருக்கல்யாணம்

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம் பாராம்பரிய முறை படி நடைபெற்றது. கல்லூரி விடுதி மாணவிகள் இரண்டு பேரை குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 40 நாட்கள் பாவை நோன்பு மேற்கொண்டனர்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டாள் திருக்கல்யாணம் பாராம்பரிய முறைப்படி இன்று நடைபெற்றது. கல்லூரி விடுதி மாணவிகள் இரண்டு பேரை குழுக்கள் முறையில் தேர்ந்தேடுக்கப்பட்டனர்.
அவர்கள் 40 நாட்கள் பாவை நோன்பு மேற்கொண்டனர்

அதில் தமிழ்துறை 3-ஆம் ஆண்டு மாணவி ஐஸ்வர்யா ஆண்டாளாகவும், முதுகலை கணிதவியல் துறை மாணவி சாந்தனா ஸ்ரீ ரெங்கமன்னாராகவும் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து கல்லூரி தியான மண்டபத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு, கன்னிகாதானம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்பு மாலை மாற்று வைபவம், நளங்கு விளையாட்டு போன்றவைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்(பொறுப்பு) முனைவர் கல்யாணி தலைமை தாங்கினார். இந்த நிகழச்சியில் பேராசிரியார்கள், அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!