May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலத்தில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது குற்றாலநாதர் திருக்கோவில் . கோவில் பஞ்ச சபைகளில் ஒன்று. கோவில் புகழ் பெற்ற சிவதலங்கள் ஒன்றாகும். இந்தக் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரத்திற்கு மா மஞ்சள் திரவியம் பால் இளநீர் ஆகிய கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

உற்சவருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து விழாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 05.01. 2020 அன்றும், 08.01.2020 அன்று சித்திர சபையில் தாண்டவ தீபாராதனையும் , 10.01.2020 ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாரதனையும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
இவ்விழாவில் மேலகரம் அதிமுக பேரூர் செயலாளர் கார்த்திக்குமார், குற்றாலம் கோவில் வியாபாரிகள் சங்க கவ்யா மாரியப்பன் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!